தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime: கல்லூரி மாணவிகள் உடையை அவிழ்த்து சோதித்த வார்டன்.. டில்லியில் அதிர்ச்சி சம்பவம்!

Crime: கல்லூரி மாணவிகள் உடையை அவிழ்த்து சோதித்த வார்டன்.. டில்லியில் அதிர்ச்சி சம்பவம்!

Pandeeswari Gurusamy HT Tamil
May 05, 2023 12:22 PM IST

Delhi:``மாணவிகள் துன்புறுத்தப்படுவதாகவும், ஆடைகளை களைந்து சோதனை நடத்தப்படுவதாகவும் எங்களுக்கு புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்று காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அகில்யாபாய் நர்சிங் கல்லூரி
அகில்யாபாய் நர்சிங் கல்லூரி

ட்ரெண்டிங் செய்திகள்

தலைநகர் தில்லியில் உள்ள அகில்யாபாய் நர்சிங் கல்லூரி செயல் பட்டு வருகிறது. அங்கு படிக்கும் மாணவிகள் சிலர் விடுதி வார்டனுடன் சமுதாய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றனர். அப்போது சென்ற இடத்தில் வார்டன் பேக்கில் இருந்த 8 ஆயிரம் ரூபாய் காணாமல் போனது.

இதையடுத்து ஆத்திரம் அடைந்த வார்டன், இது குறித்து மாணவிகளிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது. இதில் இரண்டு மாணவிகள் பணத்தை எடுத்திருப்பதாக வார்டன் சந்தேகப்பட்டார். உடனே இரண்டு மாணவிகளையும் விடுதியில் வைத்து மற்ற மாணவிகளின் துணையோடு ஆடையை அவிழ்த்து சோதனை செய்து பார்த்தார். ஆனால் இச்சோதனையில் மாணவிகளிடம் பணம் எதுவும் சிக்கவில்லை.

அதே சமயம் சோதனைக்குள்ளான மாணவிகள் இது குறித்து தங்களது பெற்றோரிடம் புகார் செய்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக விடுதிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் விடுதி வார்டனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இச்சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் செய்தனர். மேலும் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்புகாரை தொடர்ந்து உண்மை கண்டறியும் சோதனைக்கு உத்தரவிட்ட கல்லூரி நிர்வாகம் அதற்காக முதல்வர் அடங்கிய குழு ஒன்றை அமைத்திருக்கிறது.

இது குறித்து போலீஸ் அதிகாரி சஞ்சய் குமார் கூறியதாவது, ``மாணவிகள் துன்புறுத்தப்படுவதாகவும், ஆடைகளை களைந்து சோதனை நடத்தப்படுவதாகவும் எங்களுக்கு புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

IPL_Entry_Point

டாபிக்ஸ்