தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Cognizant : 18 மாதம் தான்.. மூன்றாவது முறையாக சம்பள உயர்வு.. அசத்தும் பிரபல நிறுவனம்.. உற்சாகத்தில் ஐடி உழியர்கள்!

Cognizant : 18 மாதம் தான்.. மூன்றாவது முறையாக சம்பள உயர்வு.. அசத்தும் பிரபல நிறுவனம்.. உற்சாகத்தில் ஐடி உழியர்கள்!

Divya Sekar HT Tamil
Apr 21, 2023 11:37 AM IST

காக்னிசென்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கடந்த 18 மாதத்தில் 3வது முறையாக சம்பள உயர்வை அறிவித்துள்ளது.

உற்சாகத்தில் ஐடி உழியர்கள்
உற்சாகத்தில் ஐடி உழியர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

அதில் முக்கியமாக முகநூல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா கடந்த நவம்பர் மாதம் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இந்நிலையில்தற்போது மீண்டும் 10,000த்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிவிட்டரை போலவே இந்தியாவில் உருவாக்கப்பட்ட Koo நிறுவனம் தனது மொத்த ஊழியர்களில் சுமார் 30 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 260 ஊழியர்கள் இந்த பணிநீக்கத்தின் மூலம் பணியை இழக்க உள்ளனர்.

இப்படி பிரபல நிறுவனங்கள் உழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில் காக்னிசென்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கடந்த 18 மாதத்தில் 3வது முறையாக சம்பள உயர்வை அறிவித்துள்ளது.

இந்திய ஐடி சேவை துறையில் அதிகப்படியான ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்த முன்னணி நிறுவனங்களில் மிகவும் முக்கியமானது காக்னிசென்ட். சென்னையில் நிறுவப்பட்ட இந்நிறுவனம் தற்போது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.

உலகெங்கும் ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதார தடுமாற்றத்தால் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் வேளையில் காக்னிசென்ட் நிறுவனம் ஆறு மாதங்களுக்கு முன்பு தான் தனது ஊழியர்களுக்கு அப்ரைசல் வழங்கியது.

தற்போது மீண்டும் அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காக்னிசென்ட் நிறுவனம் கடந்த 18 மாதத்தில் 3வது முறையாக சம்பள உயர்வை தனது ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

காக்னிசென்ட்டின் தலைமை மக்கள் அதிகாரி ரெபேக்கா ஷ்மிட் தனது பதவியை ராஜினாமா செய்த சில நாட்களுக்குப் பிறகு சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வந்துள்ளது. ரெபேக்கா ஷ்மிட் மே 5 முதல் காக்னிசென்ட் நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார். ரெபேக்கா ஷ்மிட் வெளியேறிய பின்பு பணிநீக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது.

உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான காக்னிசன்ட், கடந்த 18 மாதங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான உலகளாவிய ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்