தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Citroen E-c3 Ev: ‘வந்துட்டேன்னு சொல்லு’ களமிறங்கும் சிட்ரோன்!

Citroen E-C3 EV: ‘வந்துட்டேன்னு சொல்லு’ களமிறங்கும் சிட்ரோன்!

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 28, 2023 01:46 PM IST

சிட்ரோன் என்ற நிறுவனம் eC3 என்ற எலக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

சிட்ரோன்  eC3
சிட்ரோன் eC3

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களின் தயாரிப்பில் மிக வேகமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது என்ட்ரி லெவல், மிட் ரேஞ்ச், பிரீமியம் என மூன்று செக்மெண்டில் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிட்ரோன் என்ற நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் காரான eC3 என்ற எலக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலையானது 11,50,000 லட்சம் ரூபாய் என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கார் இந்தியாவில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் தொழிற்சாலையில் முழுவதுமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த கார்களின் டெலிவரி ஆனது வரும் மார்ச் மாதத்திலிருந்து தொடங்கும் இன தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரை Maison La ஷோரூம் மற்றும் இணையதளம் மூலம் வாங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் முழு விவரங்கள் குறித்து இங்கே காண்போம்.

இதன் சிறப்பம்சங்கள்

  • இந்த கார் Live, Feel, Feel Vibe Pack, Feel Dual tone Vibe Pack என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
  • இந்த விற்பனையாகும் அனைத்து ஷோரூம்களுலும் DC பாஸ்ட் சார்ஜ்ர் வசதி கொடுக்கப்படும் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேரியண்ட் எக்ஸ் ஷோரூம் விலைப்பட்டியல்

  • Live வேரியண்ட் - 11,50,000 லட்சம் ரூபாய்
  • Feel வேரியண்ட் - 12,13,000 லட்சம் ரூபாய்
  • Feel Vibe Pack வேரியண்ட் - 12,28,000 லட்சம் ரூபாய்
  • Feel Dual Tone Vibe Pack வேரியண்ட் - 12,42,000 லட்சம் ரூபாய்
  • இதில் 29.2 KWH பேட்டரி கொடுப்பட்டுள்ளது. இதனால் 320 கிமீ வரை செல்ல முடியும்.
  • இந்த காரை 57 நிமிடங்களில் 80% சார்ஜிங் ஆகிவிடும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அதிக பவர் கொண்ட 143NM டார்க்விசையை வெளிப்படுத்தும்.
  • இந்த காரில் Vehicle Tracking, Emergency Services, Driving Behaviour analysis, OTA அப்டேட் வசதி, 7 வருட சேவை, இன்சூரன்ஸ் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • இதில் குறிப்பாக My Citroen Connect , C Buddy ஆப், Android, IOS போன்ற வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளான.
  • இந்த கார் சென்னை, கோயம்புத்தூர் உள்பட இந்தியாவில் 25 முக்கிய நகரங்களில் கிடைக்கிறது.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்