தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  China: ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் வழங்கிய சீன நிறுவனம்! ஏன் தெரியுமா?

China: ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் வழங்கிய சீன நிறுவனம்! ஏன் தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 01, 2023 11:57 AM IST

சீனாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று மலை போல் பணத்தை குவித்து வைத்து தனது ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் வழங்கியுள்ளது. இதுதொடர்பான புகைப்படமும் வெளியாகியுள்ளது.

மலைப்போல் பணத்தை குவித்து ஊழியர்களுக்கு போனஸ் வழங்கிய சீனா நிறுவனம்
மலைப்போல் பணத்தை குவித்து ஊழியர்களுக்கு போனஸ் வழங்கிய சீனா நிறுவனம்

ட்ரெண்டிங் செய்திகள்

இப்படியொரு சூழிலில் சீனாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் கொடுத்து, மற்றொரு சர்ப்ரைஸாக சம்பவ உயர்வையும் அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

சீனாவிலுள்ள ஹெனான் மாகணத்தில் இயங்கி வரும் ஹெனன் மைன் என்ற நிறுவனம், கிரேன் உள்பட கனரக வாகனங்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் இந்தியா உள்பட உலகின் பல்வேறு மாநிலங்களுக்கு தனது நிறுவன தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக சீனாவில் நெருக்கடி ஏற்பட்ட பொருளாதாரம் சரிந்திருப்பது ஒரு புறம் இருந்தால், ஹெனன் மைன் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டில் மட்டும் 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதில் இந்த நிறுவனத்தின் வருவாய இந்திய மதிப்பில் ரூ. 11, 086 கோடி என இருந்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த நிறுவனம் ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக இவ்வாறு சிறப்பான கவனிப்பை செய்துள்ளது.

இதற்கான சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, ரூ. 73 கோடி 81 லட்சம் மதிப்பு பண கட்டுகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டது. இதிலிருந்து நிறுவனத்தின் உயர்வுக்காக சிறப்பாக பணியாற்றிய 3 விற்பனை மேலாளர்களுக்கு ரூ. 6 கோடி போனஸாக வழங்கப்பட்டது. மற்ற ஊழியர்கள் அனைவருக்கும் தலா ரூ. 1.20 கோடி வழங்கப்பட்டது.

இதுபோதாதென்று இந்த நிகழ்ச்சியில் பணம் எண்ணும் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. 18 லட்சம் வரை பரிசு வழங்கப்பட்டது.

IPL_Entry_Point