தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Bjp Landslide Victory In Gujarat, Bhupendra Patel To Be Cm

Gujarat election: குஜராத்தில் பாஜக அமோக வெற்றி: 12-ல் பூபேந்திர படேல் பதவி ஏற்பு

I Jayachandran HT Tamil
Dec 08, 2022 11:21 PM IST

நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் குஜராத்தில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. வரும் 12ஆம் தேதியன்று முதல்வராக பூபேந்திர படேல் மீண்டும் பதவியேற்க உள்ளார்.

பூபேந்திர படேல்
பூபேந்திர படேல்

ட்ரெண்டிங் செய்திகள்

மொத்தமுள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதியில் 15 தொகுதிகளில் வென்று மிருக பலத்தைப் பெற்றுள்ளது.

நாட்டில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில், பாஜ.. பெரும்பான்மைக்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. குஜராத்தில் ஆட்சியை தக்க வைப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில்,ஒன்றிய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள், பல்வேறு மாநிலங்களில் முதல்வர்களாக உள்ள பாஜக தலைவர்களும் மாநிலலமெங்கும் சூறாவளி பிரசாரங்கள் மேற்கொண்டனர்.

மறுபுறம் இந்த முறை ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் கட்சியும், கடுமையாக உழைத்தது.

கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் என கட்சியின் மூத்த தலைவர்கள் மாநிலத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

குஜராத்தில் இந்த முறை புதிய வரவான ஆம் ஆத்மியும் மாநிலத்தில் தேர்தல் களத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. இந்த கட்சிகள் உள்பட சுமார் 70 கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் 624 சுயேச்சைகள் என 1,621 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மாநிலத்தின் 182 உறுப்பினர் கொண்ட சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. அந்த வகையில் 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ந்தேதியும், மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு 5-ந்தேதியும் வாக்குப்பதிவு நடந்தது.

இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்த வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டன. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்தது. இதில் முதலில் தபால் வாக்குகளும், பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகளும் எண்ணப்பட்டன.

மாநிலத்தில் ஆட்சியமைக்க 92 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் என்ற நிலையில், பா.ஜ.க. தொடக்கம் முதலே அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று இருந்தது. இதன்படி, இரவு 8.30 மணியளவில் பாஜ.க. 154 இடங்களில் வெற்றி பெற்றும், 2 இடங்களில் முன்னிலையும் பெற்றிருந்தது. காங்கிரிஸ் கட்சி 17 இடங்களை கைப்பற்றி உள்ளது.

புதிய வரவான ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சி 12.82 சதவீத வாக்குகளை பெற்று வளர்ந்து வரும் கட்சியாக தன்னை அடையாளப்படுத்தி கொண்டுள்ளது. சமாஜ்வாடி கட்சி ஒரேயொரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

154 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க. பெரும்பான்மைக்கும் கூடுதலான இடங்களை கைப்பற்றி உள்ளது.

குஜராத் முதல்வராக தற்போதுள்ள பூபேந்திர படேல் 2-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கிறார்.

கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி மாநிலத்தின் 17-வது முதல்வராக படேல் பொறுப்பேற்றார்.

இந்தத் தேர்தலில் கத்லோடியா தொகுதியில் போட்டியிட்ட படேல் 1.91 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றுள்ளார்.

வரும் 12ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது. அதில் முதல்வராக மீண்டும் படேல் பதவிப் பிரமாணம் செய்து கொள்கிறார்.

IPL_Entry_Point