தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Bbc Documentary: ஜேஎன்யுவில் கல் வீச்சு; மாணவர்கள் நள்ளிரவு போராட்டம்

BBC Documentary: ஜேஎன்யுவில் கல் வீச்சு; மாணவர்கள் நள்ளிரவு போராட்டம்

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 25, 2023 01:41 PM IST

பிபிசி ஆவணப்பட விவகாரத்தில் ஜேஎன்யுவில் கல்வீச்சு சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் (ANI)

ட்ரெண்டிங் செய்திகள்

குஜராத்தில் கடந்த 2002 ம் ஆண்டு நடத்த கலவரம் குறித்து பிபிசி நிறுவனம் ஆவண படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தின் அரசு ஊடகமாக பிபிசி ஜனவரி 17ம் தேதி இந்தியா: மோடிக்கான கேள்விகள் என்ற தலைப்பில் வெளியிட்ட ஆவணப்படத்தில் பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன் வைத்துள்ளது. இந்நிலையில் இந்த ஆவணப்படத்தை வெளியிட யூடியூப், ட்விட்டர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட மத்திய அரசு கடந்த 18ம் தேதி தடைவிதித்தது. ஆனால் தற்போது பிபிசியின் ஆவணப்படம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது.

இந்நிலையில் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று பிபிசியின் ஆவணப்படத்தை சில மாணவர்கள் திரையிட திட்டமிட்டிருந்தனர். அப்போது மின்சாரம் மற்றும் இணையதளம் வசதிகள் துண்டிக்கப்பட்டது. அதையும் மீறி செல்போனில் ஆவணப்படத்தை மாணவர்கள் பார்த்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு ஆவணப்படத்தை பார்த்தவர்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

ஆர்எஸ்எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏபிவிபியை சேர்ந்த முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாய் பாலாஜி கல்லெறிந்ததாக சில மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்கள் வசந்த் குஞ்ச் காவல் நிலையத்தை நோக்கி பேரணியாக சென்றனர். பின்னர் காவல் நிலையத்திற்கு எதிரே மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கல்வீசியதாக ஆதாரமற்ற முறையில் குற்றம் சாட்டப்படுவதாக ஏபிவிபி மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே ஹைதராபாத் பல்கலையில் பிபிசி ஆவணப்படத்தை மாணவர்கள் தடையை மீறி ஒளிபரப்பி உள்ளனர். இந்நிலையில் பல்கலை நிர்வாகம், "பிபிசி ஆவணப்படத்தை திரையிடும் முன்பு மாணவர் அபை்பினர் அனுமதி எதுவும் கோரவில்லை. பல்கலைக்கழக பதிவாளரிடம் ஏபிவிபி அமைப்பினர் புகார் தெரிவித்த பிறகு தான் விஷயம் தெரியவந்தது. இதுபற்றி பல்கலைகழக பாதுகாப்பு பிரிவினரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது'' என கூறப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்