தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Anil Ambani: மோசடி வழக்கு.. அமலாக்கத்துறை பிடியில் அனில் அம்பானி, டினா அம்பானி!

Anil Ambani: மோசடி வழக்கு.. அமலாக்கத்துறை பிடியில் அனில் அம்பானி, டினா அம்பானி!

Karthikeyan S HT Tamil
Jul 04, 2023 02:04 PM IST

அந்நிய செலவாணி மோசடி வழக்கு தொடர்பாக ரிலையன்ஸ் ஏடிஏ குழுமத்தின் தலைவர் அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானி இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராகியுள்ளார்.

 அனில் அம்பானி மற்றும் அவரது மனைவி டினா அம்பானி.
அனில் அம்பானி மற்றும் அவரது மனைவி டினா அம்பானி.

ட்ரெண்டிங் செய்திகள்

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியதாக ரிலையன்ஸ் ஏடிஏ குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மற்றும் அவரது மனைவியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சொத்துக்கள் குறித்து அமலாக்கத்துறை தற்போது விசாரித்து வருகிறது. 

இந்த வழக்கு தொடர்பாக தெற்கு மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி நேற்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அமலாக்கத்துறையினரின் கேள்விகளுக்கு அனில் அம்பானி பதிலளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானி, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, டினா அம்பானி மும்பையில் உள்ள அமலாக்க இயக்குநரகத்தில் (இன்று) செவ்வாய்க்கிழமை ஆஜரானார். இந்த குற்றச்சாட்டுகள் பண்டோரா பேப்பர்ஸ் வழக்குடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

முன்னதாக, சுவிஸ் வங்கி கணக்கில் ரூ.814 கோடியிலான கணக்கில் வராத பணத்தை பதுக்கி வைத்துக்கொண்டு சுமார் ரூ.420 கோடி வரி கட்டாமல் ஏற்ப்பு செய்ததாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனில் அம்பானிக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸூக்கு கடந்த மார்ச் மாதம் மும்பை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

யெஸ் பேங்க் அதிபர் ராணா கபூருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 2020-ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினர் அனில் அம்பானியிடம் விசாரணை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

#tamilhindustantimes #hindustantimestamil #HTTamil #TamilHindustanTimes

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்