தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  நண்பனின் காதலியை உல்லாசத்திற்கு அழைத்த இளைஞர்.. சரமாரியாக குத்திக்கொன்ற காதலன்!

நண்பனின் காதலியை உல்லாசத்திற்கு அழைத்த இளைஞர்.. சரமாரியாக குத்திக்கொன்ற காதலன்!

Divya Sekar HT Tamil
Feb 24, 2023 02:09 PM IST

Andhra Murder : ஆந்திராவில் காதலியை உல்லாசத்துக்கு அழைத்த நண்பனை கடத்தி குத்திக் கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இளைஞர்.. சரமாரியாக குத்திக்கொன்ற காதலன்
இளைஞர்.. சரமாரியாக குத்திக்கொன்ற காதலன்

ட்ரெண்டிங் செய்திகள்

தினேஷின் நண்பர் முரளி கிருஷ்ணா (22) தினேஷின் செல்போனை வாங்கி பார்த்த போது காதலியின் வீடியோவை பார்த்து நண்பனின் காதலியின் நிர்வாண வீடியோக்களை தனது செல்போனுக்கு பதிவேற்றம் செய்து கொண்டார். இதையடுத்து தினேஷின் காதலிக்கு போன் செய்த முரளி கிருஷ்ணா தனது ஆசைக்கு இணங்க வேண்டும் மறுத்தால் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார்.

இச்சம்பவம் குறித்து இளம்பெண் தினேஷுக்கு தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தினேஷ் முரளி கிருஷ்ணாவை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி தனது நண்பரான கிரண்குமாரை அணுகி நடந்த சம்பவங்களை தெரிவித்தார். 

இதையடுத்து கடந்த மாதம் 25ஆம் தேதி நண்பர் கிரண்குமாருடன், முரளி கிருஷ்ணா வீட்டிற்கு சென்று மது அருந்தலாம் என கூறி பைக்கில் வைத்து பஞ்சலிங்கா என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளி கிருஷ்ணாவை சரமாரியாக குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சம்பவயிடத்திலேயே முரளி கிருஷ்ணா உயிரிழந்தார்.

பின்னர் அவரின் சடலத்தை நிர்வாணமாக நன்னூறு சுங்கச்சாவடி அருகே உள்ள அந்திரி நீவா கால்வாயில் வீசினர்.மகனை வெகு நேரமாக காணவில்லை என்பதால் முரளி கிருஷ்ணா பெற்றோர் கர்னூல் தாலுகா போலீசில் கடந்த 16-ஆம் தேதி புகார் செய்தனர். முரளி கிருஷ்ணாவை வீட்டில் இருந்து அழைத்துச் சென்ற தினேஷ் குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் நடந்ததை ஓப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷ் அவரது நண்பர் கிரண்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கால்வாயில் வீசப்பட்ட முரளி கிருஷ்ணாவின் உடலை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்