தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime: கடத்திச் செல்வதாக நினைத்த பெண் - டிரைவர் மீது துப்பாக்கிச் சூடு

Crime: கடத்திச் செல்வதாக நினைத்த பெண் - டிரைவர் மீது துப்பாக்கிச் சூடு

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 25, 2023 02:39 PM IST

அமெரிக்காவில் தன்னை கடத்திச் செல்வதாக நினைத்து கார் ஓட்டுநரைப் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு

ட்ரெண்டிங் செய்திகள்

சந்தேகத்தின் பேரில் தெரியாமல் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. 48 வயதான கோபாஸ் என்ற பெண் கென்டக்கியை சேர்ந்தவர். இவருக்கு டெக்ஸாஸில் ஒரு காதலன் உள்ளார். அங்கு அவரைப் பார்க்கச் சென்றுள்ளார் கோபாஸ். அங்கு ஒரு சூதாட்ட விடுதியில் காதலன் இருந்துள்ளார்.

இதனால் கோபாஸ் உபர் வாடகை காரில் புக் செய்து பயணம் செய்துள்ளார். அப்போது ஜுவாரெஸ் மெக்சிகோவுக்கான நெடுஞ்சாலை பலகை பார்த்துவிட்டு தன்னை கார் டிரைவர் மெக்சிகோவுக்குக் கடத்திச் செல்வதாக கோபால் நினைத்துள்ளார்.

இதனால் தனது பையில் வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து கார் ஓட்டுநர் டேனியலை தலையில் சுட்டுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுநர் காரை விபத்துக்குள்ளாச்சி உள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்த ஓட்டுநரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது, தன்னை கடத்திச் செல்வதாக நினைத்துத் தவறுதலாக ஓட்டுநரை கோபாஸ் துப்பாக்கியால் சுட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோபாஸ் மீது, கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்திய கொடூர தாக்குதல் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து டேனியலின் மனைவி, உபரில் வழங்கப்பட்டுள்ள செயலில் என்ன வழியைக் காட்டுகிறதோ அதன்படி தான் ஓட்டுநர்கள் செல்வார்கள். அந்த வழியைப் பின்பற்றித் தான் எனது கணவர் சென்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.

தவறுதலாக நினைத்து வாடகை கார் ஓட்டுநரைத் தலையில் சுட்ட சம்பவம் அந்த மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்