தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Bihar Crime: 50 ரூபாய்க்காக கொடூரக் கொலை - 35 வயது சுங்கச்சாவடி ஊழியர் பலி

Bihar Crime: 50 ரூபாய்க்காக கொடூரக் கொலை - 35 வயது சுங்கச்சாவடி ஊழியர் பலி

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 21, 2023 01:20 PM IST

பீகார் மாநிலத்தில் 50 ரூபாய் திருடியதாகக் கூறி 35 வயது இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

 50 ரூபாய்க்கு கொலை
50 ரூபாய்க்கு கொலை

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் சுங்க கட்டணத்தில் 50 ரூபாய் திருடியதாகப் புகார் எழுந்துள்ளது. இதனைக் காரணமாக வைத்து அந்த இளைஞரை சக பணியாளர்களும் மற்றும் பவுன்சர்களும் சேர்ந்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பல்வந்த் சிங் படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் அவர் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அங்கு அமைந்திருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பல்வந்த் சிங், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 50 ரூபாய் திருடியதாகச் சந்தேகத்தின் பேரில், 35 வயது இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பல்வந்த் சிங் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஊடகங்களில் பரவி வந்த வீடியோ காவல்துறையினரின் கவனத்திற்குச் சென்றுள்ளது.

பின்னர் இதனைத் தொடர்ந்து சுங்கச்சாவடியில் அமைந்துள்ள பகுதிக்குக் காவல் துறையினர் நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த பல்வந்த் சிங் ஆறு மாதங்களுக்கு மேலாக அந்த சுங்கச்சாவடியில் பணியாற்றி வந்துள்ளார்.

அவர் மீது சக பணியாளர்கள் திருட்டு புகார் கொடுத்ததும் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பவுன்சர்கள் மற்றும் சில ஊழியர்கள் மீது காவல்துறையினர் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர். உயிரிழந்த சிங்கின் உடல், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன் பின்னரே முழுமையான விவரங்கள் தெரியும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பவுன்சர்களில் நான்கு பேர், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இரண்டு பேர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் முதல் கட்ட விசாரணையில் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்