தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Andhra Pradesh: சினைப் பசுவின் வயிற்றில் 60 கிலோ பிளாஸ்டிக் - கன்றுக்குட்டி பலி

Andhra Pradesh: சினைப் பசுவின் வயிற்றில் 60 கிலோ பிளாஸ்டிக் - கன்றுக்குட்டி பலி

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 14, 2023 11:20 AM IST

கர்ப்பமாக இருந்த பசு மாட்டின் வயிற்றிலிருந்து 60 கிலோ பிளாஸ்டிக் கழிவு அகற்றப்பட்டுள்ளது.

சினைப் பசு
சினைப் பசு

ட்ரெண்டிங் செய்திகள்

அதேபோல் தெருக்களில் சுற்றி வரும் பசு மாடுகளுக்கு வீட்டில் இருக்கும் பெண்கள் கோமாதாவாக நினைத்து பழம், வீட்டில் இருக்கும் மீதமான உணவுகள், கீரைகள் உள்ளிட்டவற்றை வழங்குகின்றனர்.

இந்நிலையில் 8 மாதம் கர்ப்பமாக இருக்கும் பசு மாடு ஒன்று நடக்க முடியாமல், கழிவுகளைக் கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளது. இதனைக் கண்ட பொதுமக்கள் பசு மாட்டின் நிலை குறித்து கால்நடை மருத்துவர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை மருத்துவர்கள், வலியால் அவதிப்பட்டு வந்த அந்த பசுமாடு பொக்லைன் எந்திரம் மூலம் தூக்கி கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்க அந்த பசுமாட்டைப் பரிசோதனை செய்து பார்த்தபோது அதன் வயிற்றில் அதிக அளவு பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே கால்நடை மருத்துவர்கள் அந்த பசு மாட்டிற்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்தனர்.

அந்த பசு மாட்டின் வயிற்றில் அறுபது கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு அதன் வயிற்றிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை மருத்துவர்கள் அகற்றினர்.

மேலும் பசுவின் வயிற்றில் இருக்கக்கூடிய கன்றுக் குட்டிக்கு இயற்கையான உணவு கிடைக்காத காரணத்தினால் அது உயிரிழந்த நிலையில் இருந்தது. சிறிது நேரத்தில் பசு மாடும் உயிரிழந்தது.

ஒரு சில உணவகங்களில் வாழை இலைக்குப் பதிலாக பிளாஸ்டிக் பேப்பர்கள் பயன்படுத்தப்பட்டு அதனைக் குப்பையாகப் போடுகின்றனர். உணவின் வாசம் கண்டு அதனை உண்ணும் கால்நடைகள் பிளாஸ்டிக் பேப்பர்களையும் சாப்பிட்டு விடுகின்றன. எனவே பிளாஸ்டிக் அரசாங்கம் முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்