தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Government Of Pakistan: அரசு பற்றி அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை!

Government of Pakistan: அரசு பற்றி அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை!

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 05, 2023 11:56 AM IST

பாகிஸ்தான் அரசு உள்துறை அமைச்சகம் ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

பாகிஸ்தான் அரசு
பாகிஸ்தான் அரசு

ட்ரெண்டிங் செய்திகள்

அதேசமயம் சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் மற்றும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு மசோதா சட்டம் நீதித்துறை அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பி உள்ளது. ஆயுதப்படை மற்றும் நீதித்துறையைக் கேலி செய்யும் நோக்கத்துடன் இந்த உலகத்தின் மூலமாகவும் அறிக்கையை வெளியிடுவது அவதூறான தகவல்களைப் பரப்புவது ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

அவ்வாறு செய்யக்கூடியவர்கள் மீது குற்றவாளி மாறும் இன்றி கைது செய்யப்படுவார் என அலுவலர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக அமைச்சரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில்," சமீபகாலமாக ராணுவம் மற்றும் நீதித்துறை உட்பட அரசின் சில நிறுவனங்கள் மீது இழிவான மற்றும் கொடூரமான தாக்குதல்களை நாடு கண்டுள்ளது. வேண்டுமென்றே சுயநல நோக்கத்தோடு தவறான பிரச்சாரத்தைச் சிலர் தொடங்கியுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்