தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Honduras Prison Riot: சிறையில் கலவரம் - 41 பெண் கைதிகள் உயிரிழப்பு - கொடூரமாக எரித்துக் கொலை

Honduras Prison Riot: சிறையில் கலவரம் - 41 பெண் கைதிகள் உயிரிழப்பு - கொடூரமாக எரித்துக் கொலை

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 21, 2023 12:18 PM IST

ஹோண்டுராஸ் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 41 பெண் கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

சிறைச்சாலையில் கலவரம்
சிறைச்சாலையில் கலவரம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் நேற்று இந்த சிறைச்சாலையில் உள்ள பெண் கைதிகளுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இரண்டு குழுக்களாகப் பிரிந்து இருந்த கைதிகள் மோதிக்கொண்டனர். இதனால் சிறைச்சாலைக்குள் கலவரம் வெடித்தது. அதேசமயம் சிறைக்குள் கைதிகள் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டனர்.

மேலும் பலர் மற்றவர்கள் மீது தீ வைத்து எரித்தனர். கலவரத்தைக் கட்டுப்படுத்த அலுவலர்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். ஆனால் கைதிகள் ஆவேசத்துடன் மோதிக்கொண்ட காரணத்தினால் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு காவல்துறையினர் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 41 பெண் கைதிகள் உயிரிழந்துள்ளனர். 26 பேர் தீ வைத்து எரித்துக் கொள்ளப்பட்டுள்ளனர். மற்றவர்கள் துப்பாக்கியால் சுட்டும் மற்றும் கத்தியால் குட்டியும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கலவரத்தில் ஏராளமான சிறைக் கைதிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

படுகாயம் அடைந்த சிறை கைதிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரம் குறித்து செய்தி அறிந்த கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை முன்பு குவிந்துள்ளனர்.

இது குறித்து அந்த பகுதியில் அதிபர் சியோமாரா, சிறையில் உள்ள மாரா கும்பல், அனைவருக்கும் தெரிந்தே இந்த கலவரத்தைத் திட்டமிட்டுச் செய்துள்ளனர். இதுகுறித்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பெண்கள் சிறையில் மாரா கும்பலுக்கும், பாரியோ கும்பலுக்கும் இடையே மோதல் வந்துள்ளது. கிட்டத்தட்ட 18 கும்பல்களும் இந்த முதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலை கலவரமாக வெடித்ததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

பெண்கள் சிறைச்சாலையில் சிறை கைதிகள் கலவரத்தில் ஈடுபட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்