தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Manipur Violence: மணிப்பூர் வன்முறை - 23 ஆயிரம் பொதுமக்கள் மீட்பு - தீவிர பணியில் ராணுவம்

Manipur Violence: மணிப்பூர் வன்முறை - 23 ஆயிரம் பொதுமக்கள் மீட்பு - தீவிர பணியில் ராணுவம்

Suriyakumar Jayabalan HT Tamil
May 07, 2023 12:43 PM IST

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து இதுவரை 23 ஆயிரம் பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் வன்முறை
மணிப்பூர் வன்முறை

ட்ரெண்டிங் செய்திகள்

வான்வழி கண்காணிப்பு, யுஏவி களின் இயக்கம், இம்பால் பள்ளத்தாக்கிற்குள் ஹெலிகாப்டர் கண்காணிப்பு உள்ளிட்டவை மூலம் கண்காணிப்பு முயற்சிகளை ராணுவம் அதிகப்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு 53 விழுக்காடு மக்கள் தொகை உள்ளன. மெய்டீஸ் இனத்தைச் சேர்ந்த மக்கள் தங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிராகப் பழங்குடியின மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

கடந்த மே மூன்றாம் தேதி அன்று பழங்குடியினர் மாணவர் அமைப்பின் சார்பில் மலைப்பகுதியில் உள்ள ஏழு மாவட்டங்களில் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டபோது, மெய்டீஸ் இனத்தவரோடு மோதல் ஏற்பட்டது.

மோதல் வன்முறையாக வெடித்து மணிப்பூர் எங்கும் பற்றி எரிந்தது. மாநிலம் முழுவதும் வீடுகள், வாகனங்கள், கடைகள், வழிபாட்டுத்தலங்கள் என அனைத்தும் கொழுந்து விட்டு எரிந்தன.

இதன் காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராணுவமும், துணை ராணுவமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களைக் கண்டவுடன் சுட ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். இதுவரை மணிப்பூர் கலவரத்தில் 54 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில், முக்கியமான எல்லா சுற்றுலாத் தலங்களிலும் ராணுவம், அதிரடிப்படை, மத்திய ஆயுதப்படை என அனைத்து படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அந்த பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே அங்குக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

தற்போது வரை 23 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் மேற்கு மாவட்டங்களில் ஆங்காங்கே தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றாலும், தற்போது அந்தப் பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மத்திய ஆயுதப்படை காவல் பிரிவின் கோபுர அணியைச் சேர்ந்த கமாண்டோ ஒருவர் சூரசந்த்பூர் மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். மருத்துவ பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மணிப்பூரில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்