தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Hyderabad : இனி இப்படி பண்ணாதீங்க.. வீடியோ மோகம்.. பறிபோன சிறுவன் உயிர்.. ஹைதராபாத்தில் திக் திக் சம்பவம்!

Hyderabad : இனி இப்படி பண்ணாதீங்க.. வீடியோ மோகம்.. பறிபோன சிறுவன் உயிர்.. ஹைதராபாத்தில் திக் திக் சம்பவம்!

Divya Sekar HT Tamil
May 06, 2023 12:08 PM IST

தண்டவாளத்தில் வீடியோ எடுத்த மாணவர் ரயில் மோதி பலியான சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேறியுள்ளது.

சிறுவன் சர்ப்ராஸ்
சிறுவன் சர்ப்ராஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இன்ஸ்டாகிராமில் ரீல் வீடியோவை பதிவிடுவதற்காக தண்டவாளத்தில் நடந்து செல்வதுபோல வீடியோ எடுக்க நண்பர்களுக்கு கூறினார். அதன்படி முகமது சர்ப்ராஸ் நடனம் ஆடியபடி தண்டவாளத்தில் நடந்து சென்றார். இதனை அவரது நண்பர்கள் வீடியோ எடுத்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் லிங்கம் பள்ளியில் இருந்து சனாத் நகர் நோக்கி வந்த எம்.எம்.டி.எஸ். ரயில் முகமது சர்ப்ராஸ் மீது மோதியது.

இதில் முகமது சர்ப்ராஸ் தூக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த சனாத் நகர் ரயில்வே போலீசார் முகமது சர்ப்ராஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மாணவர் மீது ரயில் மோதிய காட்சி அவரது நண்பர்கள் செல்போனில் பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்