மோமோஸ் இந்தியா உள்ள வந்த கதை தெரியுமா?.. இது எப்படி செய்ய ஆரம்பிச்சாங்க தெரியுமா.. உணவு வரலாறு!
மோமோஸ் இந்தியாவிற்கு வந்த வரலாறு மிகவும் சுவாரசியமாக இருக்கும். அப்படி நாம் ஆசையோடு சாப்பிடும் மோமோஸின் வரலாறு குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Momos: தற்போது நமது நாட்டில் எத்தனையோ உணவுகள் மிகவும் பிரபலமாக அன்றாட பயன்பாட்டில் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட உணவுகளில் அனைவருக்கும் விருப்பமான உணவாக இருப்பதுதான் மோமோஸ். இந்த உணவு தற்போது உலகம் முழுவதும் பரவி கிடைக்கின்றன. அனைவருக்கும் பிடித்த உணவாக தற்போது உலக பட்டியலில் இருந்து வருகிறது.
கோதுமை மற்றும் மைதா மாவில் இறைச்சி, காய்கறிகள் உள்ளிட்டவைகளை உள்ளே வைத்து ஆவியில் வேகவைத்து இந்த உணவு சமைக்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மோமோஸ் உணவு அந்த அளவிற்கு பிரபலம் கிடையாது.
தற்போது தெருவுக்கு ஒன்று என ஸ்டால் அமைக்கப்பட்டு மோமோஸ் விற்கப்படுகிறது. ஆனால் இந்த உணவு எங்கே உருவாக்கப்பட்டது. எங்கிருந்து இங்கே வந்தது என பலருக்கும் தெரியாது.
மோமோஸ் இந்தியாவிற்கு வந்த வரலாறு மிகவும் சுவாரசியமாக இருக்கும். அப்படி நாம் ஆசையோடு சாப்பிடும் மோமோஸின் வரலாறு குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மோமோஸ் எப்படி உருவானது
இந்த மோமோஸ் உணவு கிட்டத்தட்ட 14 ஆம் நூற்றாண்டில் தோன்றியது என கூறப்படுகிறது. திபெத் மற்றும் நேபாள பகுதிகளில் இந்த மோமோஸ் பிறப்பிடமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. நேபாள பகுதியில் வசித்து வந்தால் நெவார் என்ற இணைத்து சேர்ந்த மக்கள் அனைத்து பகுதிகளிலும் வணிகம் செய்து வந்தனர். அப்போது நேபாளத்தில் வணிகம் செய்து வந்த இந்த மக்கள் திபத்துக்கு வணிகத்திற்காக சென்றனர்.
அந்த பயணங்களின் போது கறி மற்றும் காய்கறி போன்ற உணவுகளை சமைத்து சாப்பிடும் பழக்கத்தை வைத்திருந்தனர். அப்போதுதான் இந்த மோமோஸ் உணவு முறையை கண்டுபிடித்துள்ளனர். நேபாளத்தில் இருக்கக்கூடிய காத்மாண்டு பள்ளத்தாக்கில் இருக்கக்கூடிய நெவார் இனத்தின் இருக்கு இடையே இந்த உணவு மிகவும் பிரபலமாக இருந்து வந்துள்ளது.
வணிகத்திற்காக திபெத் செல்லும் பொழுது மாவுக்கு உள்ளே உருளைக்கிழங்கு பாலாடைகள் அல்லது மாட்டிறைச்சி உள்ளிட்டவைகளை நிரப்பி கட்டி வைத்து சென்றுள்ளனர். பயணத்தின் பொழுது அதனை சாப்பிடுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும் என்பதற்காக இந்த உணவை பயன்படுத்தி உள்ளனர்.
திபெத் மற்றும் நேபாளத்தில் இருந்த இந்த உணவு பழக்கவழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் எல்லை பக்கத்தில் வந்து நுழைந்தது.
இந்தியாவில் மோமோஸ்
அதன் பின்னர் இந்தியாவின் எல்லை பகுதியாக இருந்த தர்மசாலா, சிக்கிம், டார்ஜிலிங் போன்ற வடகிழக்கு பகுதிகளில் 1960 ஆம் ஆண்டு இந்த மோமோஸ் உள்ளே நுழைந்தது. வர்த்தகத்திற்காக வந்த நேபாளர்கள் இந்தியாவில் இருக்கக்கூடிய சமையல் கலைஞர்களுக்கு இந்த உணவு செய்முறையை சொல்லிக் கொடுத்துள்ளனர்.
நேபாளத்தில் சமைக்கக்கூடிய மோமோஸ் மிகவும் சுவை நிறைந்ததாகவும், தனித்துவமாகவும் இருந்து வந்துள்ளது. அதே செய்முறை இந்தியாவிலும் பின்பற்றப்பட்டு சாப்பிடப்பட்டு வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் சிற்றுண்டிகளில் ஒன்றாக மோமோஸ் மாறியது.
அதன் பின்னர் அசாம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில் அந்தந்த இடங்களுக்கு ஏற்ற மாற்றங்களோடு மோமோஸ் தனித்தனி உருவம் எடுத்தது. முதலில் இறைச்சியை பயன்படுத்தி சாப்பிடப்பட்டு வந்த இந்த மோமோஸ், இந்தியாவின் கங்கைப் பகுதிக்கு வரும் பொழுது சைவ உணவாக மாற்றப்பட்டு சைவ இந்துக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அசைவ பிரியர்கள் இதன் உள்ளே இறைச்சியை பயன்படுத்துவதை நிறுத்தவில்லை.
தற்போது இந்த மோமோஸ் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் சுவைக்கு ஏற்ப தனித்துவமாக தயாரிக்கப்பட்டு சாப்பிடப்பட்டு வருகிறது.