Millet Momos Recipe: பார்த்தாலே நா ஊறும் நவதானிய மோமோஸ்! சிம்பிளா செய்யலாம் வாங்க!
Millet Momos Recipe: வெளிநாட்டு உணவு முறைகள் இந்தியாவில் பரவலாக வழக்கத்திற்கு வந்துவிட்டன. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க உணவாக மோமோஸ் உள்ளது. திபெத் பகுதியை பிறப்பிடமாக கொண்ட மோமோஸ் மிகவும் ருசியான உணவாக இருந்து வருகிறது.
வெளிநாட்டு உணவு முறைகள் இந்தியாவில் பரவலாக வழக்கத்திற்கு வந்துவிட்டன. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க உணவாக மோமோஸ் உள்ளது. திபெத் பகுதியை பிறப்பிடமாக கொண்ட மோமோஸ் மிகவும் ருசியான உணவாக இருந்து வருகிறது. நமது ஊர்களில் செய்யும் கொழுக்கட்டையை போலவே மோமோஸ் செய்யப்படுகின்றன. வெளிநாட்டு உணவுகளில் நமது பாரம்பரிய முறைகளை சேர்த்து சுவையான சத்துமிக்க உணவாக மாற்ற முடியும். அந்த வரிசையில் நவ தானியங்களை வைத்து மோமோஸ் செய்யும் எளிமையான முறையை தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
ஒரு கப் நவதானிய மாவு, ஒரு கப் அவல், 200 கிராம் வெல்லம், 4 டேபிள் ஸ்பூன் நெய், சிறிதளவு முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவைகளை சம அளவில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அரை தேங்காய் முடியை உடைத்து துருவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். எள், பொரிகடலை மற்றும் தேவையான அளவு உப்பு ஆகிய பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நவ தானிய மாவு செய்யும் முறை
இந்திய உணவு முறைகளில் பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் நவதானிய வகைகளை மொத்தமாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். கோதுமை,நெல், துவரை, பாசிப்பயறு, மொச்சை , எள், உளுந்து, கொள்ளு ஆகிய நவ தானியங்களை சமய அளவில் எடுத்து, ஒவ்வொன்றாக கடாயில் பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மோமோஸ் செய்யும் முறை
அவலை தண்ணீரில் நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வெல்லப்பாகை தண்ணீரில் கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு நெய்யை விட்டு, சூடான பின் முந்திரி, உலர் திராட்சை, எள், பொரிகடலை ஆகியவற்றை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த இந்த கலவையை அவலுடன் சேர்த்து பிசையவும். இறுதியாக சிறிதளவு ஏலக்காய் தூள், நெய் சேர்க்க வேண்டும்.
இந்த பிசைந்த மாவில் துருவிய தேங்காயை சேர்க்கலாம். பின்னர் அரைத்து வைத்து இருந்த நவ தானிய மாவை சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவை பிசைவது போல நன்கு பிசையவும். தேவையான உப்பை சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக பிரிக்கவும். இறுதியாக வறுத்து அரைத்து வைத்த கலவையை ஒவ்வொரு உருண்டையிலும் நடுவில் வைத்து மோமோஸ் போல செய்துக் கொள்ளவும். மாவை ஒன்றின் மேல் ஒன்றாக படியுமாறு மடித்து கொள்ளவும். இட்லி சட்டியில் தண்ணீர் வைத்து நன்கு கொதித்த உடன் மோமோஸ்களை 10 நிமிடம் வைத்து வேக வைத்து எடுத்தால் எல்லோரும் சாப்பிடும் சுவையான நவ தானிய மோமோஸ் ரெடி.
குழந்தைகள் விரும்பி உண்ணும் மோமோஸ்
நவ தானிய மாவில் செய்த பூரணம் இருப்பதால் இந்த மோமோஸ் குழந்தைகளுக்கு சிறப்பான ஊட்டசத்துக்களை வழங்குகிறது. எந்நேரமும் சுறு சுறுப்பாக செயல்பட அதிக ஊட்டசத்து அவசியப் படுகிறது. எனவே இது போன்ற உணவுகள் அவர்களுக்கு விரும்பிய உணவாகவே சென்றடைகிறது.
டாபிக்ஸ்