Chicken Momos : சிக்கன் மோமோஸ்! குழந்தைகளுக்கு பிடித்த ஈவ்னிங் ஸ்னாக்ஸ்!
Chicken Momos : சிக்கன் மோமோஸ். குழந்தைகளுக்கு பிடித்த ஈவ்னிங் ஸ்னாக்ஸ்.
தேவையான பொருட்கள்
மாவு தயார் செய்ய
மைதா - 1 கப்
உப்பு – அரை ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
ஃபில்லிங் செய்ய தேவையான பொருட்கள்
சிக்கன் கீமா - 300 கிராம்
வால்நட் – கால் கப்
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
பூண்டு - 3 பற்கள் நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
வெங்காயத்தாள் வெங்காயம் - அரை கப் நறுக்கியது
வெங்காயத்தாள் கீரை – கால் கப்
உப்பு – அரை ஸ்பூன்
மிளகு தூள் – அரை ஸ்பூன்
சோயா சாஸ் - 2 ஸ்பூன்
செய்முறை -
மைதா மாவில் உப்பு சேர்த்து கலந்து பின்பு எண்ணெய் ஊற்றி கலந்துவிடவேண்டும்.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் பிசைந்து 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
பின் கடாயில் வால்நட் சேர்த்து வறுத்து ஆறவிட்டு பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.
பாத்திரத்தில் நறுக்கிய வால்நட், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு, வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் கீரை சேர்த்து கலந்துவிடவேண்டும்.
பின் சிக்கன் கீமாவில் உப்பு, மிளகு, சோயா சாஸ், வால்நட் கலவையை சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்.
மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி தேய்த்து கொள்ளவேண்டும்.
மாவின் நடுவில் சிக்கன் கலவையை வைத்து மாவின் முனைகளை மடிக்கவேண்டும்.
பின்னர் மூங்கில் ஸ்டீமரில் முட்டைகோஸ் இலையை வைத்து அதன் மேல் தயார் செய்த மோமோஸை வைத்து மூடி 15 நிமிடம் வேகவைக்க வேண்டும்.
சுவையான சிக்கன் மோமோஸ் தயார். குழந்தைகளுக்கு இது மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ். பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு நீங்கள் இதை செய்துகொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்