தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Yoga For Pcod : பிசிஓடி பிரச்னையால் அவதிப்படுகிறீர்களா? அதிலிருந்து விடுபட இந்த யோகாக்களை செய்யுங்கள்!

Yoga for PCOD : பிசிஓடி பிரச்னையால் அவதிப்படுகிறீர்களா? அதிலிருந்து விடுபட இந்த யோகாக்களை செய்யுங்கள்!

Priyadarshini R HT Tamil
Jul 30, 2023 12:54 PM IST

Yoga for PCOD : இவை உங்கள் கருப்பை ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்த உதவுவதில்லை. இவை உங்கள் உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதனால், கருப்பையில் சிறுசிறு கட்டிகள், மாதவிடாயில் பிரச்னைகள் ஆகியவை ஏற்படுகிறது. இதற்கு மருத்துவரின் பரிந்துரையின்பேரில் மருந்துகள் எடுத்துக்கொள்வது கட்டாயம் என்றாலும், வாழ்வியல் முறையில் மாற்றம், சிறுசிறு யோகா உங்களுக்கு உதவும்.

சூரிய நமஸ்காரம்

யோகாவில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது சூரிய நமஸ்காரம். 12 போஸ்கள் இதில் உள்ளது. இது உடலுக்கு நல்ல அசைவை கொடுத்து உடலில் அனைத்து பாகங்களுக்கும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது. இனப்பெருக்க உறுப்புகளை காக்கிறது. பிசிஓடியுடன் தொடர்புடைய ஹார்மோன் மாற்றங்களை சரி செய்ய இது உதவுகிறது.

பிராணமாசனா

ஹஸ்டாட்டனாசனா

ஹஸ்டபடாசனா

அஸ்வ சஞ்சலாசானா

தனதாசனா

அஸ்டாங்க நமஸ்காரம்

புஜங்காசனா

அதோ முகா சாவாசனா

அஸ்வ சஞ்சலாசனா

தடாசானா

பட்டர்ஃபிளை போஸ்

பட்டர்ஃப்ளை போஸ் என்பது பெண்களுக்கு மிகச்சிறந்தது. அது பெண்களின் இடுப்புப்பகுதியை வலுவாக்க உதவுகிறது. இந்த ஆசானத்தை பெண்கள் தங்கள் மாதவிடாய் நாட்களிலும் செய்யலாம். கர்ப்ப காலத்தில் கடைசி மூன்று மாதங்களிலும் செய்யலாம். 

பெண்ணுறுப்பு வழியாக குழந்தை பெறுவதற்கு வழிவகுக்கும். இடுப்புப்பகுதி குறிப்பாக கருப்பை, கருப்பை வாய் ஆகிய இடங்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இது மாதவிடாயை சரிசெய்யவும் உதவுகிறது. மேலும் கருப்பை நீர்க்கட்டி பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது.

புஜங்காசனா எனப்படும் கோப்ரா போஸ்

இது பாம்புபோல் படம் எடுத்து செய்யப்படும் ஆசனம் என்பதால், கோப்ரா போஸ் என்று அழைக்கப்படுகிறது. தண்டுவடத்தில் நெகிழ்வு தன்மையை உருவாக்குகிறது. வயிற்றுப்பகுதிக்கு நல்ல மசாஜ் கொடுத்து, இனப்பெருக்க உறுப்புக்களை பாதுகாக்கிறது. இந்த ஆசனம் செய்வதும் சுலபம் குப்புற படுத்து, கைகளை ஊன்றி இடுப்புப்பகுதி கீழே இருக்குமாறு தலையை மட்டும் நன்றாக தூக்க வேண்டும். அப்படியே சிறிது நேரம் நிற்கவேண்டும்.

பவனமுக்தாசனா என்ற விண்ட் ரிலீசிங் போஸ்

இந்த ஆசனத்தில், வயிற்றுப்புகுதியில் தேங்கியுள்ள வாயுக்கள் வெளிப்படுகின்றன. பிசிஓடி பெண்களுக்கு வயிறு உப்புசம் ஏற்படுவது வழக்கம். இந்த ஆசனம் வயிற்றுப்பகுதியில் மசாஜ் செய்யவும் உதவுகிறது. அமைதியை கொடுப்பதுடன், ஜீரணத்தையும் அதிகரிக்கிறது. மல்லாந்து படுத்துக்கொண்டு, உங்கள் முட்டியை நெஞ்சில் வைத்து கட்டிக்கொண்டு இருபுறமும் உருள வேண்டும். நன்றாக ஆழ்ந்த சுவாசம் வேண்டும்.

யோனி முத்திரை

இது கரு போலவே இருக்கும். இது உங்கள் இனப்பெருக்கத்தை அதிகரிக்க உதவும். தியானம் செய்யும்போது நீங்கள் யோனி முத்திரையில் அதை செய்ய உங்களுக்கு நல்ல அமைதி கிடைக்கும். உங்கள் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். 

உங்களின் பிசிஓடி பிரச்னைக்கு நல்ல ஒரு தீர்வாக அமைவதுடன், வேறு பயம், பதற்றம், மனஅழுத்தம் போன்ற பிரச்னைகளிலிருந்து விடுபட வழிவகுக்கும். நேராக தரையில் அமர்ந்து முதுகுத்தண்டை நேராக்கி, உங்கள் கைகளை அடிவயிற்றுப்பகுதியில் வைத்து, கட்டிக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டு, நன்றாக மூச்சை இழுத்து விடவேண்டும். இது உங்கள் இடுப்புப்பகுதியை ஆரோக்கியமாக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்