தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Weight Loss: சாதம் சாப்பிடாமல் இருக்கவே முடியாது என்பவரா நீங்கள்.. உடல் எடையை குறைக்க வேண்டுமா.. இதோ டிப்ஸ்!

Weight Loss: சாதம் சாப்பிடாமல் இருக்கவே முடியாது என்பவரா நீங்கள்.. உடல் எடையை குறைக்க வேண்டுமா.. இதோ டிப்ஸ்!

Pandeeswari Gurusamy HT Tamil
Nov 17, 2023 12:37 PM IST

Weight loss eating rice:சோறு இல்லாமல் என்ன வாழ்க்கை! எதைச் சாப்பிட்டாலும் அதனுடன் கொஞ்சம் சாதம் இருக்க வேண்டும். அப்படி சாப்பிட்டால் தான் பலருக்கு அந்த நாள் நிறைவடைவது போன்ற உணர்வு தோன்றும்.

அரிசி சாதம்
அரிசி சாதம்

ட்ரெண்டிங் செய்திகள்

சோறு இல்லாமல் என்ன வாழ்க்கை! எதைச் சாப்பிட்டாலும் அதனுடன் கொஞ்சம் சாதம் இருக்க வேண்டும். அப்படி சாப்பிட்டால் தான் பலருக்கு அந்த நாள் நிறைவடைவது போன்ற உணர்வு தோன்றும்.

சிலருக்கு பிரியாணியும் அப்படி ஒரு ஸ்பெஷல் ஐட்டம்தான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு பலருக்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது. மிகக்குறைந்த உடல் உழைப்பு, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுவது, மன அழுத்தம் என உடல் எடை அதிகரிப்புக்கு பல காரணங்கள் உள்ளது. 

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் அதிகம் கொடுக்கப்படும் அட்வைஸ் சாதம் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்பதே, ஆனால் பலருக்கும் கொஞ்சமாவது அரிசி உணவை சாப்பிடாமல் இருக்க முடியாது என்ற கட்டாயத்தில் இருப்பர் எடை அதிகரிப்பை எவ்வாறு சமாளிப்பது என கவலையா? இந்த நான்கு விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.

குறைந்த அளவு: நீங்கள் சாப்பிட விரும்புவதை விட எப்போதும் குறைந்த அளவு அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் ஒரு கிண்ணத்தைப் பயன்படுத்தலாம். ஒரு கிண்ணம் அரிசியை சாதத்தை அளந்த எடுத்துக்கொள்ளங்கள். அதன் பிறகு அதிக அரிசி சாதம் எடுக்க வேண்டும் என்ற ஆசையை கைவிடுங்கள்

சரிவிகித உணவு: நாம் அரிசி மட்டுமல்ல, அரிசியுடன் இரண்டு அல்லது மூன்று வகை காய்கறிகளை எடுத்து கொள்ளுங்கள். இப்படி சாப்பிட்டால் மேலும் அதில் அதிக சாதம் சாப்பிட விரும்ப மாட்டீர்கள். மீன், காய்கறிகள் சாப்பிடுவதால் உடல் எடை கூடும் என்ற பயம் இல்லை. பாதுகாப்பாக உணவு எடுத்து கொண்டே உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள சிறந்த வழி இது.

பலர் ஒரே அமர்வில் இரண்டு முறை சாதம் சாப்பிடுவார்கள். இந்தப் பழக்கத்தை கைவிட வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? பருப்பில் ஏதேனும் ஒரு பகுதி சமைத்திருந்தால், அதை அதிகமாக சாப்பிடலாம் அப்படி சாப்பிட்டால் சோறு கூட சாப்பிட மாட்டீர்கள். மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது இந்த விஷயத்தில் பருப்பு ஒரு சிறந்த வேலையைச் செய்கிறது. பருப்பில் அதிக அளவு புரதம் நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான சத்துக்களும் அதிகம் உள்ளன.

இறுதியில் தயிர்: 

தயிர் உணவை விரைவாகச் செரிக்க வைக்க உதவும். எனவே கடைசியில் தயிரை வைக்கவும். இது உணவை சீக்கிரம் செரிக்கும். அதே சமயம் எடையைக் குறைக்க உதவும்

தண்ணீர்:

மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் குறைந்தது ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். 

உடற்பயிற்சி

மேலும் தினமும் சீரான உடற்பயிற்சி, வாக்கிங், யோகோ போன்ற முயற்சிகளை எடுக்க வேண்டும். தொடர்ந்து செய்து வரும் போது உடல் எடை படிப்படியாக குறையும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்