தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vitamin D: ஞாபக மறதியை போக்க உதவும் வைட்டமின் டி

Vitamin D: ஞாபக மறதியை போக்க உதவும் வைட்டமின் டி

Manigandan K T HT Tamil
Mar 02, 2023 01:40 PM IST

Alzheimer: வைட்டமின் டி ஊட்டச்சத்தை நாம் சூரிய ஒளியின் வழியாகவே பெறுகிறோம். ஆனால், குளிர் காலங்களில் சூரிய ஒளி அந்த அளவுக்கு நமக்கு கிடைப்பதில்லை.

வைட்டமின் டி உணவுகள்
வைட்டமின் டி உணவுகள்

ட்ரெண்டிங் செய்திகள்

மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது ஞாபக மறதி ஏற்படுவதைத் தடுக்க உதவும் என்பது தெரியவந்துள்ளது.

கனடாவில் உள்ள Calgary பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தில் உள்ள Exeter பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், அமெரிக்க தேசிய அல்சைமர் ஒருங்கிணைப்பு மையத்தில் 12,388 க்கும் மேற்பட்ட வைட்டமின் டி கூடுதலாக எடுத்துக் கொண்டவர்களுக்கும், ஞாபக மறதி கொண்டவர்களுக்கு ஆய்வு நடத்தப்பட்டது.

"ஞாபக மறதியைக் குறைப்பதில் வைட்டமின் டி மூளையில் சில விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை நாம் அறிவோம். இருப்பினும் இதுவரை, ஆராய்ச்சி முரண்பட்ட முடிவுகளையே அளித்துள்ளது. ஆனால், தற்போது வைட்டமின் டியை அதிகம் எடுத்துக் கொண்டவர்களுக்கும், அதை எடுத்துக் கொள்ளாதவர்களுக்கும் இடையே நடத்தப்பட்ட ஆய்வில் வைட்டமின் டி எடுத்துக் கொண்டவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படுவது குறைவாகவே இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது" என்று ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய கல்கரி பல்கலைக்கழகம் மற்றும் எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜாஹினூர் இஸ்மாயில் கூறினார்.

வைட்டமின் டி உணவுகள்
வைட்டமின் டி உணவுகள்

வைட்டமின் டி ஊட்டச்சத்தை நாம் சூரிய ஒளியின் வழியாகவே பெறுகிறோம். ஆனால், குளிர் காலங்களில் சூரிய ஒளி அந்த அளவுக்கு நமக்கு கிடைப்பதில்லை.

குளிர்பிரதேசத்தில் வாழ்பவர்களுக்கு சொல்லவே வேண்டியதில்லை. எப்போதுமே அவர்கள் சூரிய ஒளியை மட்டும் நம்பியிருக்காமல் உணவுகளின் வழியாகவும் வைட்டமின் டியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் டி உள்ளது. ஆரஞ்சு பழச் சாறையும் நீங்கள் அருந்தலாம்.

மீன் உணவுகளிலும் வைட்டமின் டி நிறைந்துள்ளது.

முட்டையில் வைட்டமின் டி குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. நீங்கள் சைவ உணவை சாப்பிடுபவர்கள் என்றால் cod liver oil-ஐ பயன்படுத்தலாம். அதேநேரம், இந்த எண்ணெயையை அளவுக்கு அதிகமாகவும் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது.

காளானும் வைட்டமின் டியை கொண்டுள்ளது.

பால், வெண்ணெய், சீஸ் ஆகியவற்றிலும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. இவற்றை தினசரி உணவில் போதிய அளவு எடுத்துக் கொண்டால் வைட்டமின் டியையும் பெறலாம்; ஞாபக மறதியையும் விரட்டி அடிக்கலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்