Viral Tomato Chutney : வைரல் தக்காளி சட்னி; சூடான ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்! செய்வதும் எளிது!-viral tomato chutney viral tomato chutney delicious with warm bread easy to make too - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Viral Tomato Chutney : வைரல் தக்காளி சட்னி; சூடான ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்! செய்வதும் எளிது!

Viral Tomato Chutney : வைரல் தக்காளி சட்னி; சூடான ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்! செய்வதும் எளிது!

Priyadarshini R HT Tamil
Sep 24, 2024 04:30 PM IST

Viral Tomato Chutney : வட இந்தியாவில் ரொட்டிக்கு தொட்டுக்கொள்ள செய்யப்படும் வைரல் தக்காளி சட்னி ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. சூடான ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். செய்வதும் எளிதுதான். எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Viral Tomato Chutney : வைரல் தக்காளி சட்னி; சூடான ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்! செய்வதும் எளிது!
Viral Tomato Chutney : வைரல் தக்காளி சட்னி; சூடான ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்! செய்வதும் எளிது!

இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கொண்ட தக்காளியில் இருந்து நாம் எண்ணற்று உணவுகளை தயாரிக்க முடியும். இது அன்றாட பயன்பாட்டில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தக்காளியைப் பயன்படுத்தி தற்போது வைரலாக ஒரு சட்னி ரெசிபி சமூக வலைதளங்களில் கலக்கி வருகிறது. அந்தச் சட்னியை இட்லி, சப்பாத்தி, பூரி, பரோட்டா, தோசை, ஆப்பம், ஊத்தப்பம், ரொட்டி, நாண் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

தேவையான பொருட்கள்

தக்காளி – 4

பூண்டு – 10 பல்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

மல்லித்தழை – சிறிது (மிகப்பொடியாக நறுக்கியது)

எண்ணெய் – 4 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

வரமிளகாய்த்தூள் – கால் ஸ்பூன்

எலுமிச்சை பழச்சாறு – 2 ஸ்பூன்

இதற்கு தாளிப்பு எதுவும் தேவையில்லை. இதை ரொட்டிகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவைஅள்ளும்.

செய்முறை

இந்த சட்னிக்கு நல்ல பழுத்த சிவந்த தக்காளிகளை தேர்வு செய்துகொள்ளுங்கள். அப்போதுதான் தக்காளியின் சுவை சட்னிக்கு கூடுதல் சுவையைத்தரும்.

ஒரு தவாவை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, தக்காளிகளை பாதியாக வெட்டி வைக்கவேண்டும். தக்காளிகள் அந்த தவாவின் எண்ணெயில் வறுபடுமாறு செய்யவேண்டும். தக்காளி நன்றாக வெந்தவுடன் அதன் தோல்களை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஆறவைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு தாளிப்பு கரண்டியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பூண்டு பற்களை அதில் போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும். அதை எடுத்து தக்காளியுடன் சேர்த்து இரண்டும் ஆறியதும் கையில் அல்லது உருளைக்கிழங்கு மசிக்கும் கருவியில் வைத்து நன்றாக மசிக்கவேண்டும்.

இதை மசிப்பதுதான் இதற்கு அதிக சுவையைத்தரும். எனவே நல்ல மையாக பூண்டு மற்றும் தக்காளியை சேர்த்து மசித்துக்கொள்ளவேண்டும். தேவையான அளவு உப்பு, நறுக்கிய பெரிய வெங்காயம், மல்லித்தழை, மிளகாய்த்தூள், எலுமிச்சை பழச்சாறு ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக ஸ்பூன் வைத்து கலந்துகொள்ளவேண்டும்.

தாளிப்பு கிடையாது. அரைக்க வேண்டிய தேவையில்லை. இந்த தக்காளி சட்னி தற்போது வடஇந்தியாவில் பிரபலமாகி வருகிறது. இந்த சட்னியை நீங்கள் ரொட்டி, சப்பாத்தி, நாண் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

உங்களுக்காக இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்களை ஹெச்.டி. தமிழ் தினமும் தொகுத்து வழங்கி வருகிறது. இதுபோன்ற ரெசிபிக்களை தெரிந்துகொள்ள நீங்கள் எங்கள் இணைய பக்கத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.