Curry Leaves Thogayal : இந்த ஒரு துவையல் போதும்! நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம் எல்லாம் காணாமல் போகும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Curry Leaves Thogayal : இந்த ஒரு துவையல் போதும்! நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம் எல்லாம் காணாமல் போகும்!

Curry Leaves Thogayal : இந்த ஒரு துவையல் போதும்! நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம் எல்லாம் காணாமல் போகும்!

Priyadarshini R HT Tamil
Jan 10, 2024 02:00 PM IST

Curry Leaves Thogayal : இந்த ஒரு துவையல் போதும்! நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம் எல்லாம் காணாமல் போகும்!

Curry Leaves Thogayal : இந்த ஒரு துவையல் போதும்! நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம் எல்லாம் காணாமல் போகும்!
Curry Leaves Thogayal : இந்த ஒரு துவையல் போதும்! நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம் எல்லாம் காணாமல் போகும்!

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 3 ஸ்பூன்

கறிவேப்பிலை – கைப்பிடியளவு

புளி – எலுமிச்சை அளவு

பூண்டு – 4 பல்

வர மிளகாய் – 3

உப்பு -தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மிளகாய் – 1

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் அதில் சீரகம் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் கறிவேப்பிலை, புளி, பூண்டு, வர மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக துவையல் பதத்திற்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் கடாயில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து தாளித்து துவையலில் சேர்க்க வேண்டும்.

இந்த துவையலை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். மேலும் செரிமான பிரச்னைகளை சரிசெய்து ஜீரண மண்டலத்தை சீராக்கும்.

இந்த துவையலை அடிக்கடி செய்து சாப்பிட்டால் உடலுக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

கறிவேப்பிலையின் நன்மைகள்

கறிவேப்பிலை கொழுப்பை குறைக்க உதவுகிறது. செரிமானத்தை சீராக்குகிறது. கல்லீரலை காக்க உதவுகிறது. தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது. கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. பக்கவிளைவுகளை தடுக்கிறது. காயங்களை ஆற்றுகிறது. நீரிழிவு நோய்க்கு எதிரான உட்பொருட்கள் இதில் அடங்கியுள்ளது. ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் அந்தமான் தீவுகளில் பயரிடப்படுகிறது. இந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள் மற்றும் ஆப்பிரிக்காவிலும் பயிரடப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.