தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Violence Against Commercial Sex Workers : பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தினம் இன்று!

Violence Against Commercial Sex Workers : பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தினம் இன்று!

Priyadarshini R HT Tamil
Dec 17, 2023 07:00 AM IST

Violence Against Commercial Sex Workers : பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த வலியுறுத்தும் சர்வதேச தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

Violence Against Commercial Sex Workers : பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தினம் இன்று!
Violence Against Commercial Sex Workers : பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தினம் இன்று!

ட்ரெண்டிங் செய்திகள்

அமெரிக்க பாலியல் தொழிலாளர் திட்டம் இதை துவங்கியது. 2003ம் ஆண்டு இதன் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது. வாஷிங்டன் ஷீட்டில் பச்சை ஆறு கொலையில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக அந்த நாள் கடைபிடிக்கப்பட்டது. 

பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த சர்வதேச தினம் உலகம் முழுவதும் இணைந்து, பாகுபாடுகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து, வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறுவதற்காக கடைபிடிக்கப்படுகிறது.

49 பாலியல் தொழிலாளர்களை கொன்ற ஒரு தொடர் கொலைகளை செய்துவந்த கேரி ரிட்ஜ்வே என்பவர், அவர்களை தான் பாலியல் தொழிலாளர்களை தேர்ந்தெடுத்தற்கான காரணங்களாக, அவர்களை கொலை செய்வது குறித்து யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதை குறிப்பிட்டிருந்தார்.

அவர்களை எளிதாக கொன்றுவிடலாம் என்பது அவரின் வாதமாக இருந்தது. அவர்கள் காணாமல் போனவர்களின் பட்டியலில், இடம்பெறமாட்டார்கள். அவர்களை தேடவும் மாட்டார்கள். எனவே அவர்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் நான் மாட்டிக்கொள்ளலாம் கொலை செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

அன்னி ஸ்பிரிங்கில் மற்றும் திட்டத்தின் நிறுவுனர் ராபின் ஆகியோர் இணைந்து, ஒரு நினைவேந்தலை ஒருங்கிணைத்தனர். அதில் 60 முதல் 80 பேர் வரை கலந்துகொண்டனர். அந்த நினைவேந்தல் கூட்டம், டிசம்பர் 17ம் தேதி சான் பிரான்சிஸ்கோவின் நகர ஹாலின் தோட்டத்தில் நடைபெற்றது. அன்றுதான் ரிட்ஜ்வே குற்றவாளி என நிர்ணயிக்கப்பட்டார். அன்று முதல் டிசம்பர் 17 பாலியல் தொழிலாளர்கள் மீதான வன்முறையை நிறுத்தும் சர்வதேச தினம் டிசம்பர் 17ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

டிசம்பர் 17ம் தேதி வாரம் முழுவதுமே, பாலியல் தொழிலாளர்கள் மீது நடக்கும் வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதில் பாலியல் தொழிலாளர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் மற்றும் பிரச்னைகள், பாகுபாடுகள், வன்முறைக்கு வித்திடும் காரணி, வன்முறைகள் குறித்து குற்றம் சுமத்தும்போது, அவர்களுக்கு ஏற்படும் தடைகள் ஆகிய அனைத்து குறித்தும் விவாதிக்கப்படும்.

பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் யாரும் கண்டுகொள்ளாமல், தண்டனை பெற்றுத்தராமல் போகிறது என அன்னி ஸ்பிரிக்கில் ஒரு கடிதத்தில் எழுதினார். குற்றங்களில் பாலியல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்றால், யாரும் அதை கண்டுகொள்வதில்லை.

அவர்கள் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள். பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிறார்கள் மற்றும் கொலை செய்யப்படுகிறார்கள். பாலியல் தொழிலாளர்கள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரியாது. அவர்களை சுற்றியுள்ள அரசியல் குறித்தும் தெரியாது. ஆனால் அவர்களும் இந்த சமூகத்தின், குடும்பத்தின், நமது சுற்றத்தின் அங்கம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

WhatsApp channel

டாபிக்ஸ்