வெங்கடேஷ்பட்டின் பருப்புப்பொடி! 2 மாதம் கெடாது! டிபஃன் மற்றும் சாதத்துக்கும் ஏற்றது! செஞ்சு வெச்சுட்டு நிம்மதியா இருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வெங்கடேஷ்பட்டின் பருப்புப்பொடி! 2 மாதம் கெடாது! டிபஃன் மற்றும் சாதத்துக்கும் ஏற்றது! செஞ்சு வெச்சுட்டு நிம்மதியா இருங்க!

வெங்கடேஷ்பட்டின் பருப்புப்பொடி! 2 மாதம் கெடாது! டிபஃன் மற்றும் சாதத்துக்கும் ஏற்றது! செஞ்சு வெச்சுட்டு நிம்மதியா இருங்க!

Priyadarshini R HT Tamil
Oct 21, 2024 11:26 AM IST

வெங்கடேஷ்பட்டின் பருப்புப்பொடி, 2 மாதங்கள் வரை கெடாது. டிபஃன் மற்றும் சாதம் இரண்டுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். பணிக்கு செல்வோர் இதை செய்து வைத்துக்கொண்டு நிம்மதியாக இருக்கலாம்.

வெங்கடேஷ்பட்டின் பருப்புப்பொடி! 2 மாதம் கெடாது! டிபஃன் மற்றும் சாதத்துக்கும் ஏற்றது! செஞ்சு வெச்சுட்டு நிம்மதியா இருங்க!
வெங்கடேஷ்பட்டின் பருப்புப்பொடி! 2 மாதம் கெடாது! டிபஃன் மற்றும் சாதத்துக்கும் ஏற்றது! செஞ்சு வெச்சுட்டு நிம்மதியா இருங்க!

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு – 100 கிராம்

பாசிப்பருப்பு – 100 கிராம்

பொட்டுக்கடலை – 50 கிராம்

பூண்டு – 100 கிராம்

சீரகம் – ஒன்றரை டேபிள் ஸ்பூன்

மிளகாய் – 20 (உங்கள் கார அளவுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். மேலும் நீள மிளகாய் மற்றும் குண்டு மிளகாய் என கலந்து எடுத்துக்கொள்வது நல்லது அல்லது நீங்கள் தனித்தனியாக ஒரே மிளகாயைக் கூட எடுத்துக்கொள்ளலாம். அது உங்கள் விருப்பம்)

கல் உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு

வெல்லம் – 30 கிராம்

பெருங்காயத்தூள் – 30 கிராம்

செய்முறை

முதலில் ஒரு கடாயில் பருப்பு, பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை, பூண்டு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை என் அனைத்தையும் சேர்த்து தனித்தனியாக பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். வறுக்கும்போது மிகவும் கவனம் தேவை. நன்றாக வறுத்துவிடவேண்டும்.

அடுப்பை குறைவான தீயில் வைத்து வறுத்துக்கவேண்டும். இல்லாவிட்டால் அது கருகிவிடும். வறுக்கும்போது ஒவ்வொன்றையும் கை எடுக்காமல் கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். கிளறுவதை விட்டு கையை எடுத்துவிட்டால், கருகிவிடும். எனவே வறுப்பதில் மிகவும் கவனம் தேவை.

பெருங்காயத்தை மட்டும் கட்டியாக இருந்தால், சிறிது நல்லெண்ணெயை சேர்தது வறுத்துக்கொள்ளவேண்டும். பொடி எடுத்தீர்கள் என்றால் அடுப்பை அணைத்துவிட்டு, கடாயின் சூட்டிலே வறுத்துவிடவேண்டும். ஏனெனில் பெருங்காயத்தூள் விரைவில் கருகிவிடும் மெல்லிய தன்மை கொண்டது. எனவே பெருங்காயத்தூளை வறுப்பதில் அதிக கவனத்துடன் இருப்பது அவசியம்.

அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக ஆறவிடவேண்டும். ஆறியபின், காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடியாக அரைத்துக்கொள்ளவேண்டும். அரைக்கும்போது வெல்லைத்தை சேர்த்துக்கொள்ளவேண்டும். வெல்லத்தை வறுக்கும்போதோ அல்லது சூட்டுடனோ சேர்த்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் வெல்லம் உருகிவிடும்.

இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து, ஃபிரிட்டிஜில் வைத்துவிட்டால் போதும். இரண்டு மாதங்கள் வரை கெடாது. உங்களுக்கு தேவையான அளவு அவ்வப்போது சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். சாதத்துடன் மட்டுமின்றி இட்லி, தோசைக்கும் ஏற்றது. இது அவசரத்துக்கு உதவக்கூடியது என்பதால், குறிப்பாக பணி செல்லும் பெண்களுக்கு ஏற்றது.

இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இது உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், அரிய ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை தேர்ந்தெடுத்து ஹெச்.டி தமிழ் உங்களுக்காக வழங்கிவருகிறது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தீபாவளி சிறப்பு இனிப்புகள் உள்ளிட்ட தொடர்பான விஷயங்களை கொடுக்கிறோம். எனவே இதுபோன்ற தகவல்களை தொடர்ந்து பெற எங்கள் இணையப் பக்கத்தில் இணைந்திருங்கள். இந்த ரெசிபிக்களை செய்து சாப்பிட்டு பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடி மகிழ வாழ்த்துக்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.