வாரத்தில் கட்டாயம் 2 நாட்கள் சாப்பிடவேண்டும்! கேசரி பருப்பு; மசூர் தாலின் நன்மைகள் என்ன?
வாரத்தில் கட்டாயம் 2 நாட்கள் சாப்பிடவேண்டும். கேசரி பருப்பு, மசூர் தாலின் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

கேசரி பருப்பை வாரத்தில் 2 நாட்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டும். இதில் உள்ள நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். கேசரி பருப்பில உள்ள நன்மைகளை பாருங்கள். கேசரி பருப்பு, சிவப்பு பருப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பருப்புகளுள் ஒன்றாகும். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதை நீங்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாயம் எடுத்துக்கொள்வது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. இதை நீங்கள் அன்றாட உணவில் ஏன் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு 10 காரணங்கள் உள்ளது. அவை என்னவென்று பாருங்கள்.
புரதம்
கேசரி பருப்பில் தாவர அடிப்படையிலான புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது சைவ பிரியர்களுக்கான சிறந்த தேர்வாகும். இது தசைகளின் வளர்ச்சிக்கும், திசுக்களை சரிசெய்யவும் உதவுகிறது. உங்களை நாள் முழுவதும் ஆற்றலுடனும் வைத்துக்கொள்கிறது.
செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
கேசரி பருப்பில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அது உங்களின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. இது உங்களின் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. உங்களின் குடல் சீராக இயங்க உதவுகிறது.