ஆண்களுக்கு மட்டும்தானா? பெண்களுக்கும் வயகரா இருக்கிறது! பயன்பாடும்; பலன்களும் என்ன?
ஆண்களுக்கு மட்டும்தானா? பெண்களுக்கும் வயகரா இருக்கிறது! பயன்பாடும், பலன்களும் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

பெண்களுக்கு வாழ்வில் பல கட்டங்களில் அவர்களின் பாலுணர்வு வற்றிவிடும். ஆண்களுக்கு வயகரா உதவுவதுபோல் பெண்களுக்கு பெண்கள் வயகரா எனப்படும் ஃபிலிபான்செரின் உதவும். அது எப்படி என்று பார்ப்போம். பெரும்பாலான பெண்களுக்கு ஒரு சில இடங்களில் பாலியல் உணர்வு வற்றிவிடும். இதற்கு மன அழுத்தம், கர்ப்பம், வாழ்க்கை முறை மற்றும் குழந்தை பிறப்பு போன்றவற்றால் இதுபோல் ஏற்படுகிறது. வயதுக்கும், உடலுறுவு ஆசைக்கும் தொடர்பு உள்ளது. வயது அதிகரிக்கும்போது பாலியல் உணர்வு குறைகிறது. அதுவும் பாலியல் உணர்வு குறைவதற்கும் காரணமாகிறது. ஆண்கள் பாலியல் உணர்வை தூண்டுவதற்கு வயகரா மிகவும் உறுதுணையாக இருக்கிறது. பெண்களுக்கான வயகரா குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
மருத்துவ உண்மை
பெண்களின் செக்ஸ் ஆர்வம் குறைவது மருத்துவ ரீதியிலான ஒன்று என்று டைக்னோஸ்டிக்ஸ் மற்றும் புள்ளியியல் மனநல கோளாறு என்ற புத்தகம் வரையறுக்கிறது. இந்த கோளாறால், செக்ஸ் ஆர்வம் குறைவது மற்றும் செக்ஸ் குறித்த கற்பனைகள் தோன்றுவது, சிந்தனைகள் ஏற்படுவது, உடலுறவின்போது மகிழ்ச்சியின்மை, உடலுறவில் இன்பமின்மை, உடலுறவுக்கு முன்னெடுக்காதது போன்ற அறிகுறிகள் தோன்றும். இந்த அறிகுறிகள் குறைந்தது 6 மாதங்களாகவது ஏற்படும். இது அவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தியிருக்கும். இதற்கு உறவில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இருந்திருக்காது. மனஅழுத்தம், மனநலன் பாதிப்பு ஆகியவைகள் காரணமாக இருந்திருக்கும்.
வயகரா பெண்களுக்கு உதவுமா?
ஆண்களுக்கு வயகரா நல்ல பலன்களை கொடுத்துள்ளது. ஆனால் பெண்களுக்கு பலன் கொடுத்துள்ளதா என்பது கேள்விக்குறியே? வயகரா ஆண்களில் ஆணுறுப்புக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ரத்த நாளங்களை இலகுவாக்கி ரத்த ஓட்டத்தை அதிகரித்து, விறைப்புத்தன்மை அதிகரிக்க உதவுகிறது. இது ஆண்களின் உடலுறவுத்திறனை அதிகரிக்கிறது. பெண்களின் தூண்டுதலுக்கு எந்த உதவியும் நேரடியாக செய்வதில்லை.