Urad dhal Rice : எலும்பை இரும்பாக்க உதவும் உளுந்தஞ்சோறு; உடலை உறுதியாக்க தினமும் சாப்பிடலாம்!-urad dhal rice urad dhal rice helps iron the bones eat daily to strengthen the body - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Urad Dhal Rice : எலும்பை இரும்பாக்க உதவும் உளுந்தஞ்சோறு; உடலை உறுதியாக்க தினமும் சாப்பிடலாம்!

Urad dhal Rice : எலும்பை இரும்பாக்க உதவும் உளுந்தஞ்சோறு; உடலை உறுதியாக்க தினமும் சாப்பிடலாம்!

Priyadarshini R HT Tamil
Sep 09, 2024 10:03 AM IST

Urad dhal Rice : எலும்பை இரும்பாக்க உதவும் உளுந்தஞ்சோறு; உடலை உறுதியாக்க தினமும் சாப்பிடலாம். எத்தனை பிரச்னைகளை சரிசெய்கிறது பாருங்கள்.

Urad dhal Rice : எலும்பை இரும்பாக்க உதவும் உளுந்தஞ்சோறு; உடலை உறுதியாக்க தினமும் சாப்பிடலாம்!
Urad dhal Rice : எலும்பை இரும்பாக்க உதவும் உளுந்தஞ்சோறு; உடலை உறுதியாக்க தினமும் சாப்பிடலாம்!

தேவையான பொருட்கள்

கருப்பு உளுந்து – ஒரு கப்

அரிசி – இரண்டு கப்

சீரகம் – ஒரு ஸ்பூன்

வெந்தயம் – ஒரு ஸ்பூன்

தேங்காய் துருவல் – ஒரு கப்

பூண்டு – 20 பல்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

அரிசி, உளுந்து இரண்டையும் அலசி அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும். கருப்பு உளுந்துதான் எடுத்துக்கொள்ளவேண்டும். அதுவே சிறந்தது. வெள்ளை உளுந்தை தேர்வு செய்யாதீர்கள்.

அடுத்து ஒரு குக்கரில் கழுவி, ஊறவைத்த அரிசி மற்றும் உளுந்து இரண்டையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதனுடன் 6 கப் தண்ணீர் மற்றும் போதிய அளவு உப்பு, வெந்தயம், சீரகம், பூண்டு பற்கள், தேங்காய் துருவல் என் அனைத்தையும் சேர்த்து 4 விசில்விட்டு எடுக்கவேண்டும்.

சூப்பர் சுவையில் திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்தஞ்சோறு தயார். இதற்கு தொட்டுக்கொள்ள எலும்பு குழம்பு சிறந்தது. இது இரண்டுமே எலும்பை வலுப்படுத்தக் கூடிய உணவுகள். இவையிரண்டையும் எடுத்துக்கொள்ளும்போது, அது உங்கள் எலும்பு ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது.

கருப்பு உளுந்தின் நன்மைகள்

சர்க்கரை நோயாளிகள் கருப்பு உளுந்தை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு முறையாக பராமரிக்கப்படும்.

கருப்பு உளுந்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவுகிறது.

கருப்பு உளுந்து சருமத்துக்கு நல்லது.

கரும்புள்ளிகள், முகப்பரு மற்றும் கறைகளை எதிர்த்து போராட உதவும்.

இதய ஆரோக்கியத்துக்கு நல்லது.

செரிமானத்துக்கு நல்லது. குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

மலச்சிக்கலுக்கு நல்லது. வயிற்றுப்போக்கை எதிர்த்து போராட உதவுகிறது.

உடல் உறுப்புக்களுக்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்தத்தை வழங்குகிறது.

உடலின் ஆற்றல் அதிகரிக்க உதவுகிறது.

எலும்புகளை வலுவாக்குகிறது.

மூட்டு வலி மற்றும் எலும்பு பிரச்னைகளை தடுக்கிறது.

உடலில் இரும்புச்சத்தை அதிகப்பதால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் நல்லது.

உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை மேம்படுத்துகிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.