Unemployment Report : இந்தியாவில் தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்! – அதிர்ச்சி அறிக்கை!
அரசு சமூகநீதியை ஏற்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை நலிந்த பிரிவினர் மத்தியில் நடைமுறைப்படுத்தினாலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மத்தியில், பாதுகாப்புள்ள வேலை கிடைப்பது பகற்கனவாகவே உள்ளது.

Unemployment Report : இந்தியாவில் தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்! – அதிர்ச்சி அறிக்கை!
International Labour Organization and The Institute of Human Development - இந்தியா, இணைந்து வெளியிட்ட இந்திய வேலைவாய்ப்பு அறிக்கையில், நன்றாக படித்த இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை 2000ம் ஆண்டில் 35.2 சதவீதம் என இருந்தது, 2022ல் 65.7 சதவீதம் என ஏறக்குறைய 2 மடங்காக அதிகரித்துள்ளது.
இளம் தலைமுறையினர் மத்தியில் (Youngsters) வேலைவாய்ப்பின்மை என்பது 83 சதவீதமாக உள்ளது என்பது மிகவும் கவலையான செய்தியாகும். இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை 2000-2019 இடைப்பட்ட காலத்தில் அதிகரித்தாலும், கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பின்மை பிரச்னை சற்று குறைந்தது.
இருப்பினும், அந்த காலத்தில் படித்த இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக காணப்பட்டது.