தக்காளியையும், மல்லித்தழையையும் மட்டும் வைத்து ஒரு சட்னி அரைச்சுப் பாருங்களேன்! தினமும் கேட்பீர்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தக்காளியையும், மல்லித்தழையையும் மட்டும் வைத்து ஒரு சட்னி அரைச்சுப் பாருங்களேன்! தினமும் கேட்பீர்கள்!

தக்காளியையும், மல்லித்தழையையும் மட்டும் வைத்து ஒரு சட்னி அரைச்சுப் பாருங்களேன்! தினமும் கேட்பீர்கள்!

Priyadarshini R HT Tamil
Nov 29, 2024 04:03 PM IST

தக்காளியையும், மல்லித்தழையையும் வைத்து சட்னி அரைத்துப்பாருங்களேன்.

தக்காளியையும், மல்லித்தழையையும் மட்டும் வைத்து ஒரு சட்னி அரைச்சுப் பாருங்களேன்! தினமும் கேட்பீர்கள்!
தக்காளியையும், மல்லித்தழையையும் மட்டும் வைத்து ஒரு சட்னி அரைச்சுப் பாருங்களேன்! தினமும் கேட்பீர்கள்!

கொத்தமல்லித்தழையின் நன்மைகள்

நீரழிவு அளவை கட்டுப்படுத்துகிறது. செரிமானத்தை எளிதாக்குகிறது. மனஅழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. கண்களுக்கு நன்மை தருகிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது. கொத்தமல்லித்தைழையில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. இவையிரண்டையும் சேர்த்து சட்னி தயாரிக்கும்போது அது உங்கள் உடலுக்கு கூடுதல் நன்மைகளைத் தரும்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கருப்பு உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்

பூண்டு – 10 பல்

இஞ்சி – கால் இன்ச்

பச்சை மிளகாய் – 1

பழுத்த தக்காளி – 2

புளி – சிறிய துண்டு

உப்பு – தேவையான அளவு

மல்லித்தழை – 2 கைப்பிடியளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

கடாயில் எண்ணெய் சூடாக்கி அதில் கருப்பு உளுந்து சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும். பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பழுத்த தக்காளி, சிறிய துண்டு புளி, மல்லித்தழை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். தக்காளி நன்றாக குழைந்து வந்தவுடன், அதை எடுத்து ஆறவைத்துவிடவேண்டும்.

பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து சட்னியாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன கடுகு சேர்த்து பொரிந்தவுடன், கறிவேப்பிலை சேர்த்து அதில் சட்னியை சேர்க்கவேண்டும். அடுப்பை அணைத்துவிட்டு பரிமாறினால் வழக்கமாக 2 இட்லி சாப்பிடுபவர்கள் 4 இட்லிகள் கூடுதலாக சாப்பிடுவார்கள். 2 தோசை சாப்பிடுபவர்கள் 2 தோசை கூடுதலாக சாப்பிடுவார்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.