Train Your Teen : ‘இது கத்தியில் நடந்திடும் பருவம்’மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தும் டீன்ஏஜ்! செக்ஸ் குறித்து என்ன பேசணும்?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Train Your Teen : ‘இது கத்தியில் நடந்திடும் பருவம்’மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தும் டீன்ஏஜ்! செக்ஸ் குறித்து என்ன பேசணும்?

Train Your Teen : ‘இது கத்தியில் நடந்திடும் பருவம்’மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தும் டீன்ஏஜ்! செக்ஸ் குறித்து என்ன பேசணும்?

Priyadarshini R HT Tamil
Jul 29, 2024 06:00 AM IST

Train Your Teen : ‘இது கத்தியில் நடந்திடும் பருவம்’மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தும் டீன்ஏஜ் பருவத்தில் செக்ஸ் குறித்து குழந்தைகளிடம் என்ன பேசவேண்டும்?

Train Your Teen : ‘இது கத்தியில் நடந்திடும் பருவம்’மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தும் டீன்ஏஜ்! செக்ஸ் குறித்து என்ன பேசணும்?
Train Your Teen : ‘இது கத்தியில் நடந்திடும் பருவம்’மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தும் டீன்ஏஜ்! செக்ஸ் குறித்து என்ன பேசணும்?

உங்கள் குழந்தையின் 13 முதல் 18 வயது வரை அவர்களின் டீன்ஏஜ் பருவம் உள்ளது. அப்போது அவர்கள், புதிய திறன்களை கற்கிறார்கள். தினமும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முனைகிறார்கள்.

வளரிளம் பருவம் என்பது, முக்கியமான காலகட்டம், இந்த காலகட்டத்தில்தான் அவர்கள் வளர்ந்தவர்களாக இந்த சமுதாயத்தில் எப்படி வலம் வரப்போகிறார்கள் என்பது தெரியவரும். அவர்களின் வளர்ச்சியும் அபிரிமிதமாக இருக்கும்.

உங்கள் டீன்ஏஜ் குழந்தைகள் பல வழிகளில் சுதந்திரமாகவும், தனித்துவமாகவும் இருக்க முயல்வார்கள். ஆனாலும் அவர்கள் உங்களின் வழிகாட்டுதல் தேவை. உங்கள் டீன் ஏஜ் குழந்தைகள் சவால்களை சந்திக்கும்போது, அவர்களுக்கு புதிய வாழ்வியல் திறன்களை கற்றுக்கொடுக்க வாய்ப்புக்கள் வழங்குகள்.

அவர்களுக்கு சுதந்திரமாகவும், பொறுப்புடனும் செயல்பட வாய்ப்புக்களை வழங்குங்கள். ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு அடித்தளமாகும். உங்களின் பிணைப்பையும் வலுப்படுத்தும்.

ஆரோக்கிய பழக்க வழக்கங்களை கற்பது டீன்ஏஜ் பருவத்தின் முதல்படி. அடுத்து, அவர்களின் சமூக பழக்கவழக்கங்கள். டீன் ஏஜ் வயதுடையவர்களுக்கான ப்ரைவசி மற்றும் இடம் ஆகியவற்றைக் கொடுக்கும்போது, அது உங்கள் உறவை வலுப்படுத்துகிறது. அடுத்தது அவர்களுக்கு முக்கியமானது பாதுகாப்பு.

இந்தப்பருவத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் ஏற்படும் மனக்கிளர்ச்சி அவர்களை தவறுகள் செய்யத்தூண்டும். எனவே அவர்களுக்கு காரணமுள்ள எதிர்பார்ப்புகளை வகுத்துக்கொடுத்து, அது அவர்களை தொடர்ந்து செய்ய வையுங்கள். 

நீங்கள் அவர்களுக்கு விதிகளை வகுக்கும்போது, அவர்கள் வருத்தப்படுகிறார்கள். அதை செய்ய முடியாது என அடம்பிடிக்கிறார்கள். எனவே அவர்களுக்கு சரியான மற்றும் தெளிவான எல்லைகளை வகுத்துக்கொடுத்து அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவேண்டும்.

வாகனங்கள் ஓட்டுவது

வாகனங்கள் ஓட்டும்போது, அவர்கள் ஆர்வத்தில் அல்லது சாகச மனநிலையில் செய்யும் சில விஷயங்கள் அவர்களை மரணம் வரை கொண்டு சென்றுவிடுகிறது. இதில் 16 முதல் 19 வயது உடையவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே உங்கள் குழந்தைகள் வண்டி, வாகனங்களை தானாகவே ஓட்ட பழகும்போது நீங்களும் அவர்களுடன் பயணம் செய்யுங்கள். அவர்களுக்கு விபத்து ஏற்பட என்ன காரணம் என்பதை கண்டுபிடியுங்கள். வாகனம் ஓட்டும்போது அலட்சியம், வேகம், போதிய அனுபவவின்மை, டீன்ஏஜ் வயதினருக்கு வாகனம் ஓட்டும்போது விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பாகிறது.

அவர்களுக்கு விதிகளை வகுத்து, உங்கள் எதிர்பார்ப்புகளை தெளிவாக விளக்கிக் கூறிவிடுங்கள். அவர்களின் பொறுப்பற்ற நடத்தைகள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து பேசுங்கள். மது அருந்தி வாகனம் ஓட்டும்போது என்ன நிகழும் என்பதையும் கூறிவிடுங்கள்.

ஆபத்துக்கள்

மது மற்றும் போதை அல்லது வேறு ஏதேனும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளான பாதுகாப்பற்ற உடலுறவு ஆகியவை குறித்து உங்கள் டீன்ஏஜ் குழந்தைகளிம் பேசவேண்டும். இந்த விஷயங்கள் குறித்து அவர்களிடம் நீங்கள் தெளிவாகப் பேசிவிட்டீர்கள் என்றால் அது அவர்களின் எதிர்காலத்துக்கு உதவுவதாக இருக்கும்.

வன்முறை மற்றும் கொடுமை

டீன் ஏஜ் பருவம் அதிக வன்முறை மற்றும் கொடுமைக்கு ஆளாகும் பருவம் ஆகும். எனவே அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து அவர்களிடம் பேசுங்கள். அவர்கள் தவறான உறவில் இருந்தால், அவர்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் குறிப்பிடுங்கள். டேட்டிங் வன்முறைகள் குறித்தும் உங்கள் குழந்தைகளிடம் பேசுங்கள். காதல் உறவுகளில் ஏற்படும் வன்முறைகள் குறித்தும் உரையாடல் இருக்கவேண்டும்.

சுய வதை

தற்கொலையும் டீன் ஏஜ் பருவ மரணத்திற்கு முக்கிய காரணமாகிறது. தற்கொலை எண்ணம் அதிகம் ஏற்படும் பருவம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. தற்கொலைக்கு எண்ணற்ற காரணங்கள் இருந்தாலும், தனிமை, மனஅழுத்தம், குடும்ப பிரச்னைகள் மற்றும் வதை என அனைத்தும் இந்த வயதில் அதிகம் ஆபத்துக்களை ஏற்படுத்தும்.

மனநிலை மற்றும் நடத்தை மாற்றம், இந்த காலத்தில் அதிகம். உங்கள் குழந்தைகள் சாப்பாடு, உறக்கம், மரணம் குறித்து பேசுவது, நடத்தை மாற்றங்கள் என அனைத்திலும் மாற்றம் ஏற்படும். எனவே இதற்கெல்லாம் கட்டாயம் மருத்துவர் உதவியை நாடவேண்டும்.

தொழில்நுட்பம்

இன்றைய டீன் ஏஜ் வயதினர் மத்தியில் தொழில் நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. அது அவர்களின் டேட்டிங், உரையாடல் மற்றும் சமூகத்துடன் பழகுவது என அனைத்தையும் மாற்றிவிட்டது. எனவே அவர்களுக்கு சமூக வலைதளங்கள், புதிய ஆப்கள், டிஜிட்டல் டிவைஸ்கள் குறித்து அறிமுகப்படுத்துங்கள்.

அவர்களுக்கு ஆன்லைனில் உள்ள ஆபத்துக்கள் குறித்து விளக்குங்கள். அவர்களின் ஆன்லைன வெளிச்சத்தை எவ்வாறு கையாளவேண்டும் என்பதை கற்றுக்கொடுங்கள். அவர்களின் திரை நேரத்துக்கு தெளிவான விதிகளை வகுத்துக்கொடுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.