Magaram Rasipalan: வைராக்கியத்தால் வானத்தையும் வளைப்பார்கள்! மகர ராசியின் வாழ்வியல் தத்துவம்!
Magaram Rasi: மகரம் ராசியின் சின்னமாக முதலை உள்ளது. பாதி நீர் மற்றும் நிலங்களில் வாழக்கூடிய முதலையை போல், இவர்கள் வாழ்கை பாதி போராட்டமும், மீதி பாதி வெற்றிகளையும் தருவதாக இருக்கும்.
காலபுருஷ தத்துவத்தின் 10ஆவது ராசியான மகரம் ராசிக்கு சனி பகவான் அதிபதி ஆவார். இந்த ராசியில்தான் குரு பகவான் நீசமும், செவ்வாய் பகவான் உச்சமும் அடைகின்றனர்.
மகரம் ராசியின் நட்சத்திரங்கள்
சூரியனின் ஆதிக்கம் கொண்ட உத்ராடம், சந்திரனின் ஆதிக்கம் கொண்ட திருவோணம், செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் மகரம் ராசியில் உள்ளன.
இந்த வீடு கர்ம, ஜீவன ஸ்தானம் என அழைக்கப்படுகின்றது. இதனால் மகரம் ராசிக்காரர்களுக்கு வேலை செய்யாமல், தொழில் செய்யாமல் தூக்கம் வராது என இயல்பை கொண்டு இருப்பார்கள். இவர்கள் தொழிலில் கவனம் செலுத்தும் போது வாழ்கையில் மிகுந்த நன்மைகளை அடைவார்கள்.
போராட்டங்களும்! வெற்றிகளும்!
மகரம் ராசியின் சின்னமாக முதலை உள்ளது. பாதி நீர் மற்றும் நிலங்களில் வாழக்கூடிய முதலையை போல், இவர்கள் வாழ்கை பாதி போராட்டமும், மீதி பாதி வெற்றிகளையும் தருவதாக இருக்கும்.
செவ்வாய் உச்சம் பெறும் வீடு என்பதால் மகரம் ராசிக்காரர்கள் சற்று முன் கோபக்காரர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு கோபம் வந்தால், இவர்களால் கட்டுப்படுத்த முடியாது. மன அழுத்தம், மன உளைச்சலுக்கு ஆளகும் நிலை இவர்களுக்கு ஏற்படும்.
தாயின் ஆதரவு அதிகம்
மகரம் ராசிக்கு தந்தையின் ஆதரவை விட தாய் மூலம் மிகுந்த ஆதரவு கிடைக்கும். இவர்கள் வாழ்கையில் தாயார் மிகுந்த பலம் கொண்டவராக விளங்குவார்.
’மகரத்தால் தகரத்தையும் தங்கம் ஆக்க முடியும்’ என்ற சொலவடை உண்டு. இவர்களுக்கு எப்படி வாழ வேண்டும் என்பதை விட எப்படி வாழக்கூடாது என்ற விவரம் தெரியும். இதனால் இவர்கள் பிறருக்கு வழிகாட்டிகளாக இருப்பார்கள்.
வைராக்கியம் மிக்கவர்கள்
செவ்வாய் உச்சம் என்பதால் வைராக்கியம் கொண்டவர்களாக விளங்குவார்கள். இறுக்கமாக இருந்து காரியம் சாதிப்பதில் இவர்கள் வல்லவர்கள்.
மகரம் ராசிக்கு சூரியன் அஷ்டமாதிபதியாக வருவதால் தந்தையாரால் பெரிய ஏற்றம் இவர்களுக்கு இருக்காது. 7ஆம் அதிபதி சந்திரன் என்பதால், இவர்களுக்கு தாய் மூலம் பெரும் ஆதரவு கிடைக்கும்.
மகரம் ராசியினர் திருமணம் செய்தால், ஆணாக இருந்தால் மனைவியையும், பெண்ணாக இருந்தால் கணவனையும் உலகமாக இருந்தி நடப்பார்கள்.
மகரம் ராசிக்கு 2ஆம் வீட்டின் அதிபதியாக சனி பகவான் உள்ளதால் ஏதோ ஒரு ரூபத்தில் பொருளாதாரம் வந்து கொண்டே இருக்கும்.
5 மற்றும் 10ஆம் வீடுகளுக்கு அதிபதியாக சுக்கிரன் வருவதால், மகரம் ராசிக்காரர்களுக்கு ஆடம்ப வாழ்கை வாழ வேண்டும் என்பதில் ஆசைகள் இருக்கும். வீடு, நிலம், வாகனங்கள் வாங்குவதில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். 3, 12ஆம் அதிபதியாக குரு பகவான் உள்ளார். 4ஆம் அதிபதியாக செவ்வாய் உள்ளார்.
கடவுள் மீது அதீத பக்தி இவர்களுக்கு இருக்கும். 6, 9ஆம் இடங்களுக்கு அதிபதியாக புதன் உள்ளதால், தந்தை, கடன், நோய், வழக்கு, எதிரி பகையால் பாதிக்கப்பட்டு மீளும் நிலை உருவாகும்.
7ஆம் அதிபதியாக சந்திரன் உள்ளதால், வாழ்கை துணை அழகானவராகவும், அன்பானவராகவும் இருப்பார்கள்.
8ஆம் அதிபதியாக சூரியன் உள்ளதால், சில நேரங்களில் மரண பயம், இதயம் படபடப்பு, முதுகுவலி, வயற்று பிரச்னை, தோல் பிரச்னைகளால் பாதிப்பு ஏற்படும்.
9ஆம் அதிபதி புதன் என்பதால், இவர்களின் தந்தை சிறப்பான வாழ்கை வாழ முடியவில்லை என்ற நிலை உண்டாகும்.
10ஆம் அதிபதியாக சுக்கிரன் உள்ளது யோகம் ஆகும். தொழில் சார்ந்த விஷயங்களில் போராடி முன்னேறுவார்கள். இவர்களுக்கு அடிமைத் தொழில் செய்ய விரும்பமாட்டார்கள். அடிமைத் தொழிலில் இருந்தாலும் பின்னாட்களில் முதலாளிகளாக வருவார்கள். 11ஆம் ஆதிபதியாக செவ்வாய் பகவான் வருவதால், நண்பர்களால் மனக்கசப்பு, போராட்டம் உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
Google News: https://bit.ly/3onGqm9