Get Pregnant Naturally : மருத்துவ பிரச்னைகள் இல்லை; ஆனாலும் கருத்தரிக்க முடியவில்லையா? இயற்கை வழிகளில் இத்தனை தீர்வுகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Get Pregnant Naturally : மருத்துவ பிரச்னைகள் இல்லை; ஆனாலும் கருத்தரிக்க முடியவில்லையா? இயற்கை வழிகளில் இத்தனை தீர்வுகள்!

Get Pregnant Naturally : மருத்துவ பிரச்னைகள் இல்லை; ஆனாலும் கருத்தரிக்க முடியவில்லையா? இயற்கை வழிகளில் இத்தனை தீர்வுகள்!

Priyadarshini R HT Tamil
Jul 01, 2024 12:47 PM IST

Get Pregnant Naturally : மருத்துவ பிரச்னைகள் இல்லை; ஆனாலும் கருத்தரிக்க முடியவில்லையா? இயற்கை வழிகளில் இத்தனை தீர்வுகள்!

Get Pregnant Naturally : மருத்துவ பிரச்னைகள் இல்லை; ஆனாலும் கருத்தரிக்க முடியவில்லையா? இயற்கை வழிகளில் இத்தனை தீர்வுகள்!
Get Pregnant Naturally : மருத்துவ பிரச்னைகள் இல்லை; ஆனாலும் கருத்தரிக்க முடியவில்லையா? இயற்கை வழிகளில் இத்தனை தீர்வுகள்!

இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

கருத்தரிப்பு

திருமணம் முடிந்தோ அல்லது குழந்தை வேண்டும் என்று எண்ணும்போதோ உடனே குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போவதுதான் கருவுறாமை ஆகும். நீங்கள் எத்தனை முறை பாதுகாப்பின்றி உடலுறவு வைத்துக்கொண்டாலும், உங்களால் கருத்தரிக்க முடியவில்லையென்றால், நீங்கள் அதற்கு உரிய காரணங்களைக் கண்டுபிடிக்கவேண்டும்.

நீங்கள் கருவுற முடியாமல் போவதற்கு, ஆரோக்கிய பிரச்னைகள், உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாகின்றன. ஆனால் பாதுகாப்பான பல சிகிச்சைகள் உங்களை கருவுறவைக்கும். இயற்கை முறையிலும் சில வழிகளை பின்பற்றினால் உங்களால் கருவுற முடியும்.

அறிகுறிகள்

கருவுறாமைக்கு தெளிவான அறிகுறிகள் கிடையாது. ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னைகளால் பெண்களால் கருவுற முடியாமல் போகிறது. ஆண்களுக்கு ஹார்மோன் பிரச்னைகளாலும் கருவுற முடியாமல் போகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் சிகிச்சை பெற்று அல்லது பெறாமல் என இரு முறைகளிலும் கருவுறுகிறார்கள்.

எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?

உங்களுக்கு கருவுறுதல் பிரச்னைகள் ஏற்பட்டால், ஓராண்டு வரை நீங்கள் காத்திருக்கவேண்டும். அதற்கு பின்னர்தான் மருத்துவரை அணுகவேண்டும்.

பெண்களுக்கு,

35 வயதை கடந்துவிட்டால்,

40 வயதை கடந்த பின்னர்,

மாதவிடாய் பிரச்னைகள் ஏற்பட்டால், தாமதல் மற்றும் வலி போன்றவை,

கருவுறுதல் கோளாறுகள்,

ஓருமுறைக்கு மேல் கருச்சிதைவு

இடுப்பில் வீக்கக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தால்,

புற்றுநோய் சிகிச்சை பெற்றவராக இருந்தால்,

ஆண்களுக்கு

விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால்,

விறைப்புக் கோளாறுகள்,

புற்றுநோய் சிகிச்சை பெற்றவராக இருந்தால்,

ஹெர்னியா அறுவைசிகிச்சை செய்பவராக இருந்தால்,

உடன் பிறந்தவர்களுக்கு கருவுறுதல் கோளாறுகள் இருந்தால்,

ஆனால், உங்களின் அனைத்து மருத்துவ அறிக்கைகளும் சரியாக இருந்தும், நீங்கள் அனைத்து முயற்சிகளும் எடுத்த பின்னரும் கருத்தரிக்க முடியவில்லையா?

இயற்கை முறையில் கருத்தரிக்க என்ன வழிகள் உள்ளது?

வாரத்தில் இருமுறை எண்ணெய் குளியல் கட்டாயம் செய்யவேண்டும்.

காயகல்ப மூலிகைகளைப் பயன்படுத்தி பலன்பெறமுடியும்.

12 மணி நேர விரதமும் கைகொடுக்கும்.

பெண்கள் எனில் கல்யாண முருங்கை, மலைவேம்பு, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்தி கருப்பை ஆரோக்கியத்தை அதிகரிக்கவேண்டும்.

ஆண்களுக்கு அமுக்காரா சூரணம், ஓரிதழ் தாமரை சூரணம் ஆகியவற்றை எடுத்துக்கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ளவேண்டும்.

இவற்றை கடைபிடிப்பதுடன், உடற்பயிற்சி, மனஅழுத்தமின்மை, மகிழ்ச்சியாக வாழ்வது, ஆரோக்கியமான வழக்கமான உணவுகள் என்று எடுத்துக்கொண்டாலே போதும். நீங்கள் எளிதாக கருத்தரிக்க முடியும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பலன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.