பணியிடத்தில் ஊழியர்கள் செய்யக்கூடாத முக்கியமான தவறுகள்!

By Marimuthu M
Jul 27, 2024

Hindustan Times
Tamil

ஒரு பணியைக் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்காமல் இழுத்தடிக்கக் கூடாது. 

வகிக்கும் பதவிக்கு ஏற்ப கச்சிதமான உடைகளை அணியாமல் இருக்கக் கூடாது

உடன் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் மேல் அலுவலர்களின் பெர்ஷனல் விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டக் கூடாது.

சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது. நிதானமாக கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும். 

பணி சார்ந்த சந்தேகங்களை சகப் பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கக் கூடாது. 

நிறுவனத்தில் தரும் பயிற்சி மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்தாமல் இருக்கக்கூடாது. 

தனிப்பட்ட பிரச்னையையும் பணியிடப் பிரச்னையையும் ஒன்றாக நினைத்து வேதனைப் படக் கூடாது. 

நியூசிலாந்து பவர் ஹிட்டர் பிரண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்