தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Hair Growth Home Remedy Hair Loss Stops In One Week Want To Grow Long Black Hair Enough Of This Oil

Hair Growth Home Remedy : ஒரே வாரத்தில் முடி உதிர்வு நின்று; நீளமான கருங்கூந்தல் வளர வேண்டுமா? இந்த எண்ணெய் போதும்!

Priyadarshini R HT Tamil
Mar 24, 2024 12:53 PM IST

Hair Growth Home Remedy : முடி உதிர்வு மிகவும் அதிகமாக உள்ளது. முடி வளரவே மாட்டேன் என்கிறது என்றால் உங்களுக்கு இது ஒரு நல்ல தீர்வு தரும். இந்த எண்ணெயை பயன்படுத்தி கட்டாயம் பலன்பெறுங்கள்.

Hair Growth Home Remedy : ஒரே வாரத்தில் முடி உதிர்வு நின்று; நீளமான கருங்கூந்தல் வளர வேண்டுமா? இந்த எண்ணெய் போதும்!
Hair Growth Home Remedy : ஒரே வாரத்தில் முடி உதிர்வு நின்று; நீளமான கருங்கூந்தல் வளர வேண்டுமா? இந்த எண்ணெய் போதும்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த எண்ணெயை ஒரு வாரம் தொடர்ந்து பயன்படுத்தினால் உங்களுக்கு மாற்றம் தெரியும், இரண்டு வாரத்தில் முடி உதிர்வது முற்றிலும் குறைந்து புதிய முடி வளர்வதை பார்க்கலாம். குறிப்பாக முடி உதிர்வு அதிகம் உள்ள இடங்களில் முடி வளர்வதை கண்கூடாக காண முடியும்.

நாம் ஷாம்பூக்களை பயன்படுத்தும்போது, அதில் உள்ள வேதிப்பொருட்கள் முடியின் வேர்க்கால்களில் ஊடுருவி பேன், பொடுகு தொல்லைகளை ஏற்படுத்தும். இதனால் தலையில் அரிப்பு ஏற்படும். இதனால் தலைமுறை வறண்டும் போகும். அதற்கு இந்த எண்ணெய், தலைமுடிக்கு தேவையான ஊட்டமளிக்கும். மேலும், தலைமுடியை இயற்கையான முறையில் பளபளப்பாக்கும்.

கற்றாழை எண்ணெயை தினமும் உபயோக்கிக்கலாம் அல்லது தலைக்கு குளிப்பதற்கு முன்னரும் பயன்படுத்தலாம்.

கற்றாழை – 5 (தோலை நீக்கி உள்ளே உள்ள ஜெல்லை எடுத்துக்கொள்ள வேண்டும்)

புதினா – கைப்பிடி

(கற்றாழையால் ஏற்படும் குளிர்ச்சி, பேன், பொடுகு ஆகியவற்றை தடுக்கும். தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி உதிர்வை முற்றிலும் குறைக்கும்)

இவையிரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கருஞ்சீரகம் – ஒரு ஸ்பூன்

வெந்தயம் – ஒரு ஸ்பூன்

விளக்கெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

ஒரு கடாயில் ஒரு கப் கற்றாழை மற்றும் புதினா அரைத்த கலவையை சேர்த்து குறைவான தீயில் கொதிக்க விடவேண்டும்.

அடுத்து இரண்டு கப் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும். அடுப்பை குறைவான தீயில் வைக்க வேண்டும்.

அதிக தீயை வைத்தால் அது கருக்கிவிடும். நிறத்தை மாற்றி தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களை குறைத்துவிடும்.

நுரை தட்டி வரும்போது, எண்ணெய் பிரிந்து வரும்போது கருஞ்சீரகம், வெந்தயம் இரண்டையும் சேர்த்து உடனே அடுப்பை அணைத்துவிடவேண்டும்.

இதை நீண்ட நேரம் கொதிக்கவிடக்கூடாது. கொதிக்கவிட்டால், எண்ணெயில் பிசுபிசுப்பு அதிகரிக்கும். எனவே அந்த சூட்டிலே இவையிரண்டும் வெந்தால் போதும்.

நன்றாக ஆறியவுடன், வடிகட்டவேண்டும். அந்த எண்ணெயில் அளவில் கால் பங்கு விளக்கெண்ணெய் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இரண்டையும் நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

(விளக்கெண்ணெய் புது முடி வளர உதவும், இறந்த செல்களைப்போக்கும். இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது)

இதை வெளியில் வைத்து தினமும் தலைக்கு பயன்படுத்தலாம். இரவில் தலையில் தடவிவிட்டு, காலையில் தலைமுடியை அலசலாம். ஆண்கள், பெண்கள் இருவரும் பயன்படுத்தலாம். நல்ல பலன் கொடுக்கும்.

நீங்கள் எண்ணெய் தடவி நீண்ட நேரம் வைத்திருக்கும் பழக்கம்கொண்டவர்கள் என்றால் அதற்கும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம். மூன்றாவது வாரத்தில் நல்ல பலன்களை கண்கூடாக காண முடியும்.

முடியின் பளபளப்பையும் அதிகரிக்கும். தலைமுடி ஆரோக்கியமாகவும் இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள

WhatsApp channel

டாபிக்ஸ்