Mustard Oil: சரும ஆரோக்கியம் முதல் வலி நிவாரணம் வரை..! கடுகு எண்ணெய்யில் ஒளிந்திருக்கும் எக்கச்சக்க ஆரோக்கிய நன்மைகள்-benefits of including mustard oil in your diet - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mustard Oil: சரும ஆரோக்கியம் முதல் வலி நிவாரணம் வரை..! கடுகு எண்ணெய்யில் ஒளிந்திருக்கும் எக்கச்சக்க ஆரோக்கிய நன்மைகள்

Mustard Oil: சரும ஆரோக்கியம் முதல் வலி நிவாரணம் வரை..! கடுகு எண்ணெய்யில் ஒளிந்திருக்கும் எக்கச்சக்க ஆரோக்கிய நன்மைகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 22, 2024 04:59 PM IST

கடுகு எண்ணெய்யை உங்களது டயட்டில் சேர்த்துக்கொள்வதல் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். சரும ஆரோக்கியம் முதல் வலி நிவாரணியாக இருப்பது வரை கடுகு எண்ணெய்யில் ஒளிந்திருக்கும் நன்மை தரும் விஷயங்களை பார்க்கலாம்

கடுகு எண்ணெய் நன்மைகள்
கடுகு எண்ணெய் நன்மைகள்

கடுகு எண்ணெய் உணவின் சுவையை மெருகேற்றுவதோடு இல்லாமல் பல்வேறு விதமான உடல் நல ஆரோக்கியத்தையும் கொண்டுள்ளது. திடமான எண்ணெய்யாக இருந்து வரும் கடுகு எண்ணெய் இயற்கையான சன்ஸ்கிரீனாகவும் திகழ்கிறது

கடுகு எண்ணெய்யில் போலேட்ஸ், நியாசின், தயமின், பைரிடாக்சின், ரிபோபிளேவின் மற்றும் பி.காம்ப்ளக்ஸ் என நிறைய விட்டமின்கள் உள்ளன. அவற்றால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்

சருமம் மற்றும் தலை முடி ஆரோக்கியத்துக்கு நன்மை

கடுகு எண்ணெய்யில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இதுதவிர வைட்டமின் ஈ, ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இருப்பதால் சருமத்தை பாதுகாத்து, தலைமுடி தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கிறது.

இயற்கை கிளீன்சராக திகழும் இதில், சருமத்தில் உள்ள துளைகளை திறந்து வியர்வை சுரப்பிகளை தூண்டுகிறது. கடுகு எண்ணெய்யை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்தால் நிறமி புள்ளிகளை ஒளிரச் செய்து, முகத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது.

சருமத்துக்கு ஊட்டமளித்து, வீக்கங்களை ஆற்றுப்படுத்துகிறது. அதேபோல் தொடர்ந்து கடுகு எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் பொடுகுள் ஏற்படுவதை தடுத்து, முடி வளர்ச்சியை தூண்டுவதன் மூலம் முடி உதிர்வதை தடுக்கிறது

முடி வளர்ச்சி, இளநரை போன்றவற்றுக்கு நல்ல பலன்களை தருகிறது. கடுகு எண்ணெய் - தயிர் ஆகிவற்றை இணைந்து முடி சார்ந்த பிரச்னைக்கு பயன்படுத்தலாம்.

வீக்கத்தை குறைக்கிறது

கடுகு எண்ணெய்யில் இருக்கும் அல்லைல் ஐசோதியோசயனேட் என்கிற சேர்மானம் வீக்கம், அழற்சிகளை குறைக்கிறது. இதில் இருக்கும் ஒமேகா 3 அமிலங்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது

சளிக்கு நிவாரணம் அளிக்கிறது

சூடனுடன் சேர்த்து அல்லது க்ரீம்கள் மற்றும் ஆனிமெண்ட்களில் சேர்க்கப்பட்டிருக்கும் கடுகு எண்ணெய் சளி மற்றும் இருமல் தொல்லைக்கு தீர்வு அளிக்கிறது. சுவாச உறுப்புகளில் ஏற்படும் தொற்றுகளையும் விரட்ட உதவுவதாக கூறப்படுகிறது. மேற்கூறிய பாதிப்புகளுக்கு மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்த கூடாது

அதிக ஸ்மோக்கிங் பாயிண்ட் கொண்டுள்ளது

இதன் காரணமாக பல்வேறு வகையான உணவுகளை கடுகு எண்ணெய்யில் தயார் செய்யலாம். அந்த வகையில் பொறித்தல், ப்ரை சமையல்களுக்கு உகந்ததாக இந்த எண்ணெய் உள்ளது

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கும் கடுகு எண்ணெய் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகள், ட்ரைகிளிசரைடு அளவுகளை கட்டுப்படுத்த உதவுகிறது. ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கிறது. இதன் காரணமாக இதயம் தொடர்பான நோய் பாதிப்புகளின் ஆபத்தானது குறைகிறது.

வலிகளை போக்குகிறது

எலும்பு, தசை வலிகளை போக்க உதவுகிறது கடுகு எண்ணெய். இதில் இருக்கும் ஆல்பா-லினோலெனிக் அமிலம் வீக்கம் மற்றும் வலிகளை குறைக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.