தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vitamin C Benefits: உடம்பால் உருவாக்க முடியாத வைட்டமின் சி… தினமும் எடுக்கல அவ்வளவுதான்! - என்னென்ன பிரச்சினைகள் வரும்?

Vitamin C Benefits: உடம்பால் உருவாக்க முடியாத வைட்டமின் சி… தினமும் எடுக்கல அவ்வளவுதான்! - என்னென்ன பிரச்சினைகள் வரும்?

Kalyani Pandiyan S HT Tamil
Apr 23, 2024 09:17 AM IST

இவ்வளவு நன்மைகளையும், பெருமைகளையும் உள்ளடக்கிய வைட்டமின் சத்தை, நம் உடம்பால் உற்பத்தி செய்ய முடியாது என்பது மிகப் பெரிய சாபக்கேடு. அதன் காரணமாகத்தான், வைட்டமின் சி சத்தை, உணவுப் பொருட்களின் மூலமாக நாம் எடுத்துக் கொள்கிறோம்.

வைட்டமின் சி சத்து!
வைட்டமின் சி சத்து!

ட்ரெண்டிங் செய்திகள்

அது நல்ல திசுக்களாக இருக்க வேண்டும். அந்த திசுக்கள் வளர்வதற்கு கொலாஜின் தேவை. இது வயிற்றுப் பகுதியில் வரக்கூடிய புண்களுக்கு மட்டுமல்ல, உடம்பில் வரக்கூடிய எல்லாவித புண்களுக்கும் தேவைப்படுகிறது. நமது உடலில் உள்ள நரம்புகளுக்கு இடையே நடக்கும் தகவல் பரிமாற்றத்திற்கும், இந்த சத்தானது முக்கியமாக தேவைப்படுகிறது.

இந்த கொலாஜின் நமக்கு எதன் மூலமாக கிடைக்கிறது என்றால், வைட்டமின் சி சத்து மூலமாகத்தான் கிடைக்கிறது. 

இவ்வளவு நன்மைகளையும், பெருமைகளையும் உள்ளடக்கிய வைட்டமின் சத்தை, நம் உடம்பால் உற்பத்தி செய்ய முடியாது என்பது மிகப் பெரிய சாபக்கேடு. அதன் காரணமாகத்தான், வைட்டமின் சி சத்தை, உணவுப் பொருட்களின் மூலமாக நாம் எடுத்துக் கொள்கிறோம்.

வைட்டமின் சி சத்தானது நமக்கு சளி பிடித்தால், அதை தடுக்காது. ஆனால் சளி தொல்லை நமது உடம்பில் இருக்கக்கூடிய கால நேரத்தை அது கண்டிப்பாக குறைக்கும்.

தினசரி தேவையை பொறுத்தவரை, 6 மாத குழந்தைக்கு 40 மில்லி கிராம் வைட்டமின் சி சத்தும், 7 முதல் 12 வயது குழந்தைக்கு 50 மில்லிகிராம் வைட்டமின் சி சத்தும், 1 முதல் 3  வயது குழந்தைக்கு, 15 மில்லி கிராம் வைட்டமின் சி சத்தும், 4 முதல் 8 வயது குழந்தைகளுக்கு 25 மில்லி கிராம் வைட்டமின் சி சத்தும், 9 முதல் 13 வயது குழந்தைகளுக்கு 45 மில்லி கிராம் வைட்டமின் சி சத்தும், 14 முதல் 18 வயது குழந்தைகளுக்கு 65 மில்லி கிராம் வைட்டமின் சி சத்தும், 19 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 90 மில்லிகிராம் வைட்டமின் சி சத்தும் தேவைப்படுகிறது.

நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால், இன்னும் தினசரித்தேவையுடன் 35 கிராம் அளவு வைட்டமின் சி சத்தை சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படியானால் கிட்டத்தட்ட ஒரு மனிதனுக்கு சராசரியாக  90 மில்லி கிராம் அளவிற்கு வைட்டமின் சி சத்தானது தேவைப்படுகிறது. 

அது எந்தெந்த உணவில் நமக்கு கிடைக்கிறது என்பதை பார்க்கலாம். நாம் ஒரு ஆரஞ்சு பழ ஜீஸை எடுத்துக்கொள்ளும் போது, அன்றைய தினத்திற்கு தேவையான வைட்டமின் சி சத்தானது நமக்கு கிடைத்து விடுகிறது.

ஒரு திராட்சை ஜூஸை சாப்பிடும் பொழுதும், நமக்கு வைட்டமின் சி சத்து கிடைக்கிறது. ஒரு கொய்யாப் பழத்தில் இருந்து 64 மில்லிகிராம் அளவிற்கான வைட்டமின் சி சத்து கிடைக்கிறது. 

அதேபோல கீரைகளை நாம் தினசரி நமது உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுதும், அன்றைக்கு தேவையான வைட்டமின் சி சத்தானது நமக்கு கிடைத்து விடுகிறது.

அதேபோல தக்காளி பழ ஜூஸில் இருந்து, நமக்கு 33 கிராம் வைட்டமின் சி சத்தானது கிடைக்கிறது. அரைக்கப் முட்டைக்கோஸில் 28 மில்லி கிராம் வைட்டமின் சி சத்தும், காலிபிளவரில் 26 மில்லி கிராம் வைட்டமின் சி சத்தும் கிடைக்கிறது.

உருளைக்கிழங்கில் இருந்து நமக்கு 17 மில்லி கிராம் வைட்டமின் சி சத்தானது கிடைக்கிறது. உருளைக்கிழங்கை அதிகமாக எடுத்துக் கொள்ள முடியாது. காரணம், அதில் ஸ்டார்ச் சத்து அதிகம் இருக்கிறது. அதேபோல எலுமிச்சை,  ஆப்பிள், பப்பாளி உள்ளிட்டவற்றில் இருந்தும் நமக்கு இந்த வைட்டமின் சி சத்தானது கிடைக்கிறது. 

வைட்டமின் சி சத்தானது குறையும் பொழுது, ஈறுகளில் பிரச்சினை, மூட்டு வலி, முடி உதிர்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்