தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Symptoms Of Heart Attack

Cardiac Arrest : என்ன… இவையெல்லாம் மாரடைப்பின் அறிகுறிகளா? தெரிந்துகொள்வோம்.

Priyadarshini R HT Tamil
Mar 27, 2023 02:04 PM IST

Heart Attack : இன்றைய மாறிவரும் பழக்க வழக்கங்களால் நாம் அனைவரும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிறோம். இதனால், புற்றுநோய் போன்ற நோய்கள் கூட எளிதாக நம்மை அதிகளவில் தாக்கி வருகிறது. அனைவருமே ஏதாவது ஒரு நீண்ட நாள் நோயால் பாதிக்கப்படுகிறோம்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஓரிரு மாதம் முன்பே அறிகுறிகள் தோன்றும். மாடிப்படிகள் ஏறும்போது மூச்சிரைக்கும். ஊசிகுத்தினாற்போல் மார்புவலி தோன்றும். மதிய உணவுக்குப் பின் தலை அதிகமாக வியர்க்கும். உடலில் ஒருவிதமான எரிச்சல் தோன்றும். அதை வயிற்றில் உண்டான எரிச்சல் என்றெண்ணி நாம் ஜெலூசில் குடிப்போம். இடதுகைப்பக்கம் வலி தோன்றும். முதுகுவலியும் தோள் வலியும் இடது பக்கமே ஏற்படும். 

மாரடைப்பு வருவதற்கு ஓரிரு நாள் முன்னதாக மனத்தில் அமைதியின்மை தோன்றும். திடீரென்று ஓரு நொடியில் நெஞ்சு வலி ஏற்பட்டு, ஒவ்வொரு நுண் நொடிக்கும் வலி கடுமையாக இருக்கும். இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் வலி திடீரென குறையும். அடுத்த ஐந்தாவது நிமிடம குபீரென உடல் முழுவதும் வியர்க்கும். குளித்ததைப்போல உடலில் உள்ள நீரெல்லாம் வியர்வையாக வெளியேறும்.

அதனால் தாகம் அதிகமாக எடுக்கும். நீர் குடித்தால் வாந்திவரும். இதுவே இறுதி அறிகுறி. இதற்குள நீங்கள் மருத்துவமனையை அடைந்திருக்க வேண்டும். இதனை அடுத்து வலி மரண வலியாகவே இருக்கும். அதற்குள்  முதலுதவி செய்யப்பட்டிருக்க வேண்டும். அதிகபட்சமான ஒரு மணி நேரத்திற்குள் முதலுதவி கிடைத்திருக்க வேண்டும். 

மாரடைப்பின் வேகத்தை தற்காலிகமாகக் குறைத்து வலியை நீக்க ஒரு ஊசி செலுத்துவர். அது ரத்தத்தின் நீர்மத்தை அதிகமாக்கி இயல்பாகச் செலுத்தும். வலியை முற்றிலும் நீக்கவும் செய்யும். ஆனால், இதயத்தின் அடைப்பு அப்படியேதான் இருக்கும். ஒருசில நாட்களில் ஆஞ்சியோ கிராம் செய்து அடைப்பு எங்குள்ளது என்பது கண்டுபிடிக்கப்படும். பின் ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து அடைப்பிருக்கும் இடத்தில் விரிவலைக் குழாய் ஸ்டென்ட் பொருத்திவிடுவர். மாரடைப்பு வலியாக மட்டுமே தோன்றாது. நெஞ்சை யாரோ இறுக்குவது போன்ற வலியுடனும் ஏற்டுபடும். மாரடைப்பு பின்னிரவில் அதிகமாக தாக்கும். கவனமாக இருந்தாலோ மாரடைப்பில் இருந்து விடுபடலாம்.  

WhatsApp channel

டாபிக்ஸ்