தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Sulaimani Tea : மழைக்கு இதமான சுலைமானி டீ! மீண்டும், மீண்டும் பருகத் தூண்டும்!

Sulaimani Tea : மழைக்கு இதமான சுலைமானி டீ! மீண்டும், மீண்டும் பருகத் தூண்டும்!

Priyadarshini R HT Tamil
Nov 04, 2023 12:15 PM IST

Sulaimani Tea : மழைக்கு இதமான சுலைமானி டீ, மீண்டும், மீண்டும் பருகத் தூண்டும். குளிரைப்போக்கி உடலை சூடாக்கும்.

Sulaimani Tea : மழைக்கு இதமான சுலைமானி டீ! மீண்டும், மீண்டும் பருகத் தூண்டும்!
Sulaimani Tea : மழைக்கு இதமான சுலைமானி டீ! மீண்டும், மீண்டும் பருகத் தூண்டும்!

ட்ரெண்டிங் செய்திகள்

இஞ்சி – துருவியது

பட்டை – 1

கிராம்பு – 4

ஏலக்காய் – 2

இஞ்சி – 1 ஸ்பூன் இடித்தது

சர்க்கரை – ஒரு ஸ்பூன்

டீத்தூள் – அரை ஸ்பூன்

எலுமிச்சை – அரைப்பழம்

செய்முறை

பட்டை, கிராம்பு, ஏலக்காய் அனைத்தையும் நுணுக்கிக்கொள்ள வேண்டும். அதை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து, இடித்த இஞ்சி மற்றும் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவேண்டும்.

பின்னர் டீத்தூளை சேர்க்க வேண்டும். நல்ல நிறம் மாறியவுடன், சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.

பின்னர் வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அதில் எலுமிச்சை சாறு பிழந்து உடனடியாக சூடு ஆறுவதற்குள் குடிக்க வேண்டும்.

இதில் புதினா இலைகளையும் சேர்த்துக்கொள்ளலாம். சர்க்கரைக்கு பதில் தேனும் சேர்த்துக்கொள்ளலாம். தேன் சேர்க்க விரும்பினீர்கள் என்றால், அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டியவுடன், எலுமிச்சை சாறுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

மழைக்கு இதமானதும், சூடானதும் மட்டுமின்றி, இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

இதனால், மழைக்காலத்தில் ஏற்படும். சளி, இருமல், காய்ச்சல் வராமல் தடுக்கலாம். தினமும் காலை, மாலை என இருவேளைகள் குடித்து வந்தாலே போதுமானது.

எலுமிச்சை சாறு, புதினா என அனைத்தும் சேர்ப்பதால், உடலுக்கு சுறுசுறுப்பை வழங்கி மூளைக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. குளிருக்கு இதமாகி மழைக்காலத்தில் உடலுக்கு சூட்டை அளிக்கிறது.

எனவே மழைக்காலத்தில் வழக்கமான பால் தேநீராக அல்லாமல் இதுபோன்ற தண்ணீரில் வைத்து தேநீராக பருகுவது உடலுக்கும் நல்லது.

இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பருகும் வகையில் இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்