தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Sticky Cholesterol : இந்தியாவில் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் பிரச்னைகள்! உடலில் படியும் கொழுப்பை நீக்கும் எளிய வழிகள்!

Sticky Cholesterol : இந்தியாவில் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் பிரச்னைகள்! உடலில் படியும் கொழுப்பை நீக்கும் எளிய வழிகள்!

Priyadarshini R HT Tamil
Jan 29, 2024 12:27 PM IST

Sticky Cholesterol : இந்தியாவில் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் பிரச்னைகள்! உடலில் படியும் கொழுப்பை நீக்கும் எளிய வழிகள்!

Sticky Cholesterol : இந்தியாவில் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் பிரச்னைகள்! உடலில் படியும் கொழுப்பை நீக்கும் எளிய வழிகள்!
Sticky Cholesterol : இந்தியாவில் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் பிரச்னைகள்! உடலில் படியும் கொழுப்பை நீக்கும் எளிய வழிகள்!

ட்ரெண்டிங் செய்திகள்

எனினும் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகரித்தால் அது இதயத்துக்கு ரத்தம் கொண்டு செல்லும் தமனிகளின் சுவர்களில் படிந்து, ரத்த ஓட்டத்தை குலைத்து இதயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதனால் நெஞ்சுவலி ஏற்படுகிறது அல்லது ரத்த ஓட்டம் இதய தசைகளுக்கு போதிய அளவு செல்லாததால் சிரமங்கள் ஏற்படலாம்.

திடீரென ரத்த அடைப்பு ஏற்பட்டு, இதய திசுக்களை பாதித்து மாரடைப்பை ஏற்படுத்தலாம்.

மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி, பக்கவாத நோயை ஏற்படுத்தலாம்.

உங்கள் உடலில் கொழுப்பு அதிகரித்துவிட்டதற்கான அறிகுறிகள்

விரைவில் கண்டுபிடித்துவிட்டால் வாழ்க்கை காப்பாற்றப்படும். அதிக கொழுப்பு இருந்தால் ஒரு அறிகுறியும் தோன்றாது, இதை முன்னரே கண்டுபிடித்து சரிசெய்வது அவசியம். இதற்கு வழக்கமான ரத்த பரிசோதனைகள் உதவும். அதன்மூலம் கண்டுபிடித்து சேதம் ஏற்படுவதற்கு முன் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

உடலில் ஒட்டியிருக்கும் கொழுப்பை குறைக்க என்ன செய்யவேண்டும்?

வாழ்வியல் முறை மாற்றங்கள்

சரிவிகித உணவு உட்கொள்ள வேண்டும். கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்ப்பது உதவும். வழக்கமான உடற்பயிற்சிகள் கொழுப்பு குறைய உதவும். புகைக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால், அதை நிறுத்துவது உங்கள் உடலில் கொழுப்பின் அளவை குறைக்க உதவும்.

கொழுப்பு உணவை குறைக்க வேண்டும்

கொழுப்பு உணவு அதிகம் எடுத்துக்கொள்வதை குறைக்க வேண்டும் குறிப்பாக சாச்சுரேடட் ஃபேட். இந்த கொழுப்பு பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் வறுத்த உணவுகளில் உள்ளது. ஆரோக்கிய உணவு உட்கொள்வதை தேர்வு செய்து, ஆரோக்கயி கொழுப்பு உடல்லி சேர்வதை உறுதி செய்து, தமனி சுவர்களில் கொழுப்பு படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி அவசியம்

வழக்கமான உடற்பயிற்சி, உடலில் ஒட்டும் கொழுப்பை பராமரிப்பதில் உதவுகிறது. இது எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ஒட்டுமொத்த இதய ஆரோகக்கியத்தையும் அதிகரிக்கிறது. நல்ல கொழுப்பு சமமின்மைக்கு பங்களிக்கிறது. எனவே மிதமானது முதல் கடுமையான உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். குறிப்பாக நடை, சைக்கிள் ஓட்டுவது ஆகியவை ஆகும்.

மருந்துகள்

சிலருக்கு வாழ்வியல் மாற்றங்கள் மட்டும் உதவாது. கொழுப்பை குறைக்கும் மருந்துகளையும் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். சிலருக்கு கடுமையான பிரச்னைகள் இருக்கும்போது, அறுவைசிகிச்சைகள் கூட செய்யப்படும். எனவே அதுவும் தேவைப்பட்டால் செய்துதான் ஆக வேண்டும். அவை பல உள்ளன. தேவைக்கு ஏற்றாற்போல் மருத்துவர்கள் தேர்ந்தெடுத்து செய்வார்கள். 

ஆனால் உங்கள் இதய ஆரோக்கியத்தை காக்க வேண்டுமானால் உடலில் கொழுப்பு சேர்வதை குறைக்க வேண்டும். எனவே அதற்கு தேவையான வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் ஆரம்பத்திலேயே கவனம் செலுத்துவது போன்றவை மிகவும் முக்கியம். எனவே பாதிப்புள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரை மற்றும் கொஞ்சம் உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்