Soya Chunks Kola Urundai : சோயா சங்க்ஸ் கோலா உருண்டை; சுவையில் அசத்தும்! குழந்தைகள் விரும்பும் சூப்பர் ஸ்னாக்ஸ்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Soya Chunks Kola Urundai : சோயா சங்க்ஸ் கோலா உருண்டை; சுவையில் அசத்தும்! குழந்தைகள் விரும்பும் சூப்பர் ஸ்னாக்ஸ்!

Soya Chunks Kola Urundai : சோயா சங்க்ஸ் கோலா உருண்டை; சுவையில் அசத்தும்! குழந்தைகள் விரும்பும் சூப்பர் ஸ்னாக்ஸ்!

Priyadarshini R HT Tamil
Sep 17, 2024 01:54 PM IST

Soya Chunks Kola Urundai : சோயா சங்க்ஸ் கோலா உருண்டை, சுவையில் அசத்தும். குழந்தைகள் விரும்பும் சூப்பர் ஸ்னாக்ஸ். அதை எப்படி செய்வது என்று பாருங்கள்.

Soya Chunks Kola Urundai : சோயா சங்க்ஸ் கோலா உருண்டை; சுவையில் அசத்தும்! குழந்தைகள் விரும்பும் சூப்பர் ஸ்னாக்ஸ்!
Soya Chunks Kola Urundai : சோயா சங்க்ஸ் கோலா உருண்டை; சுவையில் அசத்தும்! குழந்தைகள் விரும்பும் சூப்பர் ஸ்னாக்ஸ்!

சோயா சங்க்ஸை ஊறவைத்து அரைத்து இந்த கோலா உருண்டைகளை தயாரிக்க வேண்டும். இதை பொரித்து எடுக்குபோது நீங்கள் சில வழிமுறைகளை பின்பற்றவேண்டும். அது இந்த உருண்டைகளுக்கு சிறப்பான சுவையைத்தருகிறது.

சோயா சங்க்ஸ் கோலா உருண்டை செய்ய தேவையான பொருட்கள்

அரைக்க தேவையான பொருட்கள்

சோயா சங்கஸ் – ஒரு கப்

பச்சை மிளகாய் – 2

தேங்காய் – அரை கப் (துருவியது)

பூண்டு – 4 பல்

இஞ்சி – ஒரு இன்ச்

சோம்பு – அரை ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

மிளகு – 4

முழு கரம் மசாலா (பட்டை – 1, கிராம்பு – 4, ஸ்டார் சோம்பு – 1, பிரியாணி இலை – 1, ஏலக்காய் – 1)

அல்லது

கரம் மசாலாப் பொடி

பொட்டுக்கடலை – கால் கப்

முந்திரி பருப்பு – 6

உப்பு – தேவையான அளவு

மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு

பொரிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – பொரிக்க தாராளமாக

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

சோயா சங்க்ஸை வெது வெதுப்பான நீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும். பின்னர் தண்ணீரை பிழிந்துவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

முதலில் மசாலா பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளவேண்டும். சோயா சங்ஸ்களை அதில் சேர்க்கக்கூடாது. இவற்றை தண்ணீர் விடாமல் அரைத்து அதில் ஊறவைத்த சோயா சங்க்ஸ்களை நன்றாக பிழிந்துவிட்டு இந்த மசாலாவுடன் சேர்த்து பக்குவமாக அரைத்து கொள்ளவேண்டும். உப்பு சரி பார்த்துக்கொள்ளவேண்டும். சோலா உருண்டை மிக்ஸ் தயார்.

இதை கைகளில் எண்ணெய்தொட்டு சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவேண்டும். உருட்டும்போது கவனமாக உருட்டவேண்டும். உருண்டை வெடித்துவிடக்கூடாது. நல்ல வழுவழுப்பாக உருட்டிக்கொள்ள வேண்டும்.

கடாயில் உருண்டைகளை பொரித்து எடுக்கும் அளவுக்கு எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானவுடன் பொரித்து எடுக்கவேண்டும்.

அடுப்பை தேவையான அளவுக்கு மாற்றிக்கொள்ளவேண்டும். பரிமாறும் முன் கறிவேப்பிலையை வறுத்து அதில் சேர்க்கவேண்டும். சூப்பர் சுவையான சோயா சங்க்ஸ் அல்லது மீல் மேக்கர் கோலா உருண்டை தயார்.

சோயா சங்க்ஸ் தவிர்த்து, மற்ற அணைத்து மசாலா பொருட்களையும் வதக்கி ஆறவைத்தும் அரைக்கலாம். ஆனால் இதை நீங்கள் எளிதாக செய்துவிடமுடியும்.

அது வித்யாசமான சுவைத்தரும். எப்படி செய்தாலும் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் கேட்பார்கள்.

இதுபோன்ற ரெசிபிக்களை தினமும் ஹெச்.டி தமிழ் தேர்ந்தெடுத்து உங்களுக்கு வழங்கி வருகிறது. எனவே நீங்கள் சமையல் வல்லுனர் ஆகவேண்டுமெனில் எங்கள் இணைய பக்கத்தை தொடருங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.