Benefits of Epsom Salt Bath : நீங்கள் குளிக்கும் நீரில் எப்சம் உப்பு கலக்க வேண்டும்! அதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்ன?-benefits of epsom salt bath you should mix epsom salt in your bath water what are the health benefits of it - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Epsom Salt Bath : நீங்கள் குளிக்கும் நீரில் எப்சம் உப்பு கலக்க வேண்டும்! அதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்ன?

Benefits of Epsom Salt Bath : நீங்கள் குளிக்கும் நீரில் எப்சம் உப்பு கலக்க வேண்டும்! அதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்ன?

Priyadarshini R HT Tamil
Sep 17, 2024 09:56 AM IST

Benefits of Epsom Salt Bath : நீங்கள் குளிக்கும் நீரில் எப்சம் உப்பு கலக்க வேண்டும். அதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Epsom Salt Bath : நீங்கள் குளிக்கும் நீரில் எப்சம் உப்பு கலக்க வேண்டும்! அதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்ன?
Benefits of Epsom Salt Bath : நீங்கள் குளிக்கும் நீரில் எப்சம் உப்பு கலக்க வேண்டும்! அதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்ன?

ரிலாக்ஸ்

மற்ற அனைத்து நன்மைகளையும் விட எப்சம் உப்புகள் உங்கள் உடலுக்கு தேவையான ரிலாக்ஸ் தரும். எப்சம் உப்பில் மெக்னீசியச் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் மனஅழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சருமம் மெக்னீசியத்தை உறிஞ்சும். உங்கள் நரம்புகளுக்கு மயக்கத்தை தரும். கார்டிசால் அளவைக் குறைக்கும். இதனால் உங்களுக்கு இதமான உணர்வு ஏற்படும். மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கும். பரபரப்பான நாளில் அல்லது மாதவிடாய் காலங்களில் இது உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.

மூட்டு வலி

உங்கள் தசைகள் மற்றும் மூட்டுகளுக்கு எப்சம் உப்பு இதமான ஆறுதலைத்தரும். இதில் உள்ள மெக்னீசியம் உங்கள் உடல்லி வீக்கத்தை குறைக்கும். உங்கள் தசைகளை ரிலாக்ஸ் செய்யும். இது அத்லடிக்குகள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் நபர்களுக்கு உதவும். இளஞ்சூடான தண்ணீரில் எப்சம் உப்பை கலந்து குளித்தால் அது உங்கள் உடலில் உள்ள வலிகளைப்போக்கும். உங்கள் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தைப்போக்கும். இதனால் நாள்பட்ட வலி மற்றும் இறுக்கம் குறையும்.

சருமம்

சரும பாதுகாப்பில் சிறப்பான ஆற்றலை எப்சம் உப்புகள் வழங்கும். எப்சம் உப்பில் குளிக்கும்போது அது உங்கள் சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள மெக்னீசியம் சல்ஃபேட், சருமத்தில் உள்ள இறந்த செல்களைப் போக்குகிறது. நச்சுகளை நீக்குகிறது. இதனால் சருமம் மிருதுவாகவும், இதமாகவும் மாறுகிறது. சரும எரிச்சல், அரிப்பு மற்றும் வீக்கம் ஆகியவற்றையும் எப்சம் உப்பு போக்குகிறது. இது எக்சைமா, சொரியாசிஸ் போன்ற சரும நோய்களையும் குணப்படுத்துகிறது. சருமத்தில் நீர்ச்சத்தை பராமரிக்கிறது. இதில் உள்ள மினரல்கள் சருமத்துக்கு ஆரோக்கியமான தோற்றத்தை தரும். உங்கள் சருமத்தை புத்துணர்வுடன் வைத்திருக்க உதவும்.

உறக்கம்

உறக்கத்தின் தரம் மற்றும் உறக்க முறைகளை முறைப்படுத்துவதில் மெக்னீசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. எப்சம் உப்பு கலந்த நீரில் உறங்கச் செல்லும் முன் குளித்துவிட்டுச்சென்றால், எப்சம் உப்பை உடல் உறிஞ்சும், இதனால் உங்களின் நியூரோடிரான்ஸ்மிட்டர்கள், செரோடின்களை சுரக்கச் செய்து, உங்கள் மனநிலையை மாற்றி உறக்கத்தை நிம்மதியாக்கும். இரவில் மெக்னீசியம் குறிப்பாக எப்சம் உப்பை பயன்படுத்தும்போது, அது உங்கள் உடலுக்கு எண்ணற்ற மாற்றத்தை தருகிறது. விரைவாக உறங்க உதவுகிறது. இது உறக்க கோளாறுகள் மற்றும் பிரச்னைகளால் அவதியுறுவோருக்கு சிறந்த பலனைத் தரும்.

உடலில் உள்ள கழிவுகளை நீக்கும்

எப்சம் உப்பில் உள்ள சல்ஃபேட்டுகள் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கனமான மெட்டல்களைப் போக்கும். இவை நமது உடலில் நமக்கு தெரியாமலே சேர்ந்தவையாகும். இதனால் உங்கள் தசைகளுக்கு இதம் கிடைக்கும். உங்கள் சரும மெம்ரேன்களுக்கு நல்லது. நீங்கள் குளிக்கும் தண்ணீரில் சரியான மினரல்கள் கலக்கும்போது அது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். இதனால் உங்கள் உடல் பாதுகாக்கப்படும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.