Onion Chutney : ‘அடுப்பே வேண்டாம்.. அசத்தலான ‘பச்சை சட்னி’ செய்யலாம்.. செலவும் கம்மி.. ருசி எங்கேயோ..’
Onion Chutney : கிராமங்களில் ஒரு காலத்தில், ஒரே தேர்வாக இருந்த இந்த சட்னியை இன்று ஓரிரு ஓட்டல்களில் நீங்கள் பார்க்கலாம். ருசி என்பது ஒருபுறம், பட்ஜெட் ரீதியாகவும் உதவும் என்பது முக்கிய காரணம். இப்படிப்பட்ட பச்சை சட்னியை நீங்களும் செய்து, அதன் ரசிகராக மாறுங்கள்.

Onion Chutney : இட்லி, தோசை ப்ரியர் என்றால், உங்களுக்கு இந்த சட்னியை தெரிந்திருக்க வேண்டும். மேஹியை விட வேகமாக தயாரிக்க முடியும் இந்த சட்னியை, ருசியிலும், தோற்றத்திலும் பார்க்க அவ்வளவு அருமையாக இருக்கும் இந்த சட்னி தான், ஒரு காலத்தில் கிராமங்களின் ஃபேவரைட் சட்னியாகும். இதோ இந்த பச்சை சட்னியை தயாரிக்கத் தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை விளக்கம்:
தேவையான பொருட்கள் என்ன?
- கருவேப்பிலை
- காய்ந்த மிளகாய்
- ஒரு பூண்டு
- 100 கிராம் சின்ன வெங்காயம்
- தக்காளி 2
- பெருங்காயத் தூள்
- தாளிக்க சிறிது எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
எளிய செய்முறை விளக்கம் இதோ
மிக்ஸி ஜாரில் சிறிது கருவேப்பிலை, 5 காய்ந்த மிளகாய், ஒரு பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும். கருவேப்பிலை நிறைய சேர்த்தால் கசப்பு வந்துவிடும். கவனமாக இருக்கவும். இப்போது மிக்ஸியில் நன்றாக அவற்றை அரைக்கவும். பேஸ்ட் போல வந்ததும், மிளகாய் உள்ளிட்டவை சரியாக அரைந்துள்ளதா என்பதை ஒருமுறை பார்த்துக் கொள்ளவும். அதன் பின் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து அரைக்கவும். இப்போது பார்க்க கலராக அழகாக இருக்கும்.