TOP 10 NEWS: ஃபார்முலா 4 கார் பந்தயம் தாமதம்! சனி பிரதோச வழிபாடு கோலாகலம்! இன்றைய டாப் 10 செய்திகள்!-todays evening top 10 news including formula 4 car racing vande bharat train service shani pradhosha worship - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ஃபார்முலா 4 கார் பந்தயம் தாமதம்! சனி பிரதோச வழிபாடு கோலாகலம்! இன்றைய டாப் 10 செய்திகள்!

TOP 10 NEWS: ஃபார்முலா 4 கார் பந்தயம் தாமதம்! சனி பிரதோச வழிபாடு கோலாகலம்! இன்றைய டாப் 10 செய்திகள்!

Kathiravan V HT Tamil
Aug 31, 2024 10:10 PM IST

TOP 10 NEWS: சென்னையில் ஃபார்முலா கார் பந்தயம் நிகழ்வு, தமிழ்நாட்டில் புதிய வந்தே பாரத் ரயில் சேவை, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம், சனி மகா பிரதோச வழிபாடு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: ஃபார்முலா 4 கார் பந்தயம் தாமதம்! சனி பிரதோச வழிபாடு கோலாகலம்! இன்றைய டாப் 10 செய்திகள்!
TOP 10 NEWS: ஃபார்முலா 4 கார் பந்தயம் தாமதம்! சனி பிரதோச வழிபாடு கோலாகலம்! இன்றைய டாப் 10 செய்திகள்!

1.ஃபார்முலா - 4 கார் பந்தயத்திற்கு தாமதம்

சென்னையில் ஃபார்முலா - 4 கார் பந்தயம் தொடங்குவதில் தாமதம் ஆகிறது. தொழில் நுட்ப கோளாறு காரணம் என தகவல்.

2.நள்ளிரவில் கரையை கடக்கும்

வங்கக்கடலில் நிலை கொண்டு உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. 

3.தேவநாதன் யாதவிடம் 3 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னையில் நிதிநிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதன் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் ஆக உள்ள தேவநாதன் யாதவ் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார். மயிலாப்பூர் நிதி லிமிடெட் நிறுவனத்தில் நிதி முறைகேடு நடந்த புகாரின் பேரில் பெருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். 

4.பொத்தேரியில் கஞ்சா பறிமுதல் 

சென்னையை அடுத்த பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் அருகே நூற்றுக்கணக்கான குடியிருப்புகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இரண்டே கால் கிலோ கஞ்சா பதுக்கிய ரவுடி செல்வமணி என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

5.தமிழ்நாட்டில் புதிய வந்தே பாரத் சேவை

சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  

6.கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் 

தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்திற்காக கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது. முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்ற நிலையில் அவரது முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. 

7.ஃபார்முலா 4 பந்தய அனுமதிக்க அவகாசம் 

ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான FIA சான்று பெற இரவு 8 மணி வரை அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 

8.மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி

சென்னையின் மையப்பகுதியில் கார் பந்தயம் எதற்கு என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி. 

9.அன்புமணி ராமதாஸ் கேள்வி 

சென்னை வெள்ளத்தடுப்புத் திட்டங்கள் குறித்த திருப்புகழ் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 13 மாதங்களாகியும் தமிழக அரசு வெளியிடாதது ஏன்? என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி. 

10. சனி பிரதோஷ வழிபாடு கோலாகலம்

ஆவணி மாத சனி பிரதோஷத்தை ஒட்டி தஞ்சாவூர் பெரிய கோயிலில் 13 அடி உயரமுள்ள மகா நந்திக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம்.

 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.