Senai Kizhagu Kola Urundai : சேனை கிழங்கில் செய்யலாம் சூப்பர் சுவையில் கோலா உருண்டை! உச்சுக்கொட்டி சாப்பிடுவீர்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Senai Kizhagu Kola Urundai : சேனை கிழங்கில் செய்யலாம் சூப்பர் சுவையில் கோலா உருண்டை! உச்சுக்கொட்டி சாப்பிடுவீர்கள்!

Senai Kizhagu Kola Urundai : சேனை கிழங்கில் செய்யலாம் சூப்பர் சுவையில் கோலா உருண்டை! உச்சுக்கொட்டி சாப்பிடுவீர்கள்!

Priyadarshini R HT Tamil
Updated Sep 20, 2024 02:54 PM IST

Senai Kizhagu Kola Urundai : சேனை கிழங்கில் செய்யலாம் சூப்பர் சுவையில் கோலா உருண்டை. உச்சுக்கொட்டி சாப்பிடுவீர்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

Senai Kizhagu Kola Urundai : சேனை கிழங்கில் செய்யலாம் சூப்பர் சுவையில் கோலா உருண்டை! உச்சுக்கொட்டி சாப்பிடுவீர்கள்!
Senai Kizhagu Kola Urundai : சேனை கிழங்கில் செய்யலாம் சூப்பர் சுவையில் கோலா உருண்டை! உச்சுக்கொட்டி சாப்பிடுவீர்கள்!

தேவையான பொருட்கள்

சேனைக்கிழங்கு – கால் கிலோ

அரைக்க தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 8 பல்

பூண்டு – 4 பல்

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

பச்சை மிளகாய் – 1

வர மிளகாய் – 1

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பட்டை – சிறிய துண்டு

கிராம்பு – 2

சோம்பு – கால் ஸ்பூன்

மல்லித்தழை – சிறிதளவு

கடலை பருப்பு அரை மணி நேரம் ஊறவைத்தது – கைப்பிடியளவு

தேங்காய் – கைப்பிடியளவு

பொட்டுக்கடலை – 4 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

சேனைக்கிழங்கின் தோலை நீக்கி, சிறு துண்டுகளாக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள், உப்பு, ஒரு சிறிய துண்டு புளி சேர்த்து வேகவைக்க வேண்டும். புளி சேனைக்கிழங்கின் அரிப்புத்தன்மையைப் போக்கும் தன்மை கொண்டது. 

வேகவைத்த சேனைக்கிழங்கை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவேண்டும். புளியை தனியாக எடுத்து தூக்கி வீசிவிடவேண்டும். குக்கரில் வைத்து வேகவைத்தால் ஒரே ஒரு விசில் மட்டும் விட்டு எடுத்துக்கொள்ளவேண்டும். கையில் மசிக்க முடிந்த அளவுக்கு வேகவைத்துக்கொள்ளவேண்டும். எனவே அந்தப் பதம் வரும் வரை வேக விடவேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, ஊற வைத்த கடலைப்பருப்பு, மல்லித்தழை, சோம்பு, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் என அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

சேனைக்கிழங்கை மசித்து அதனுடன் அரை விழுதை சேர்த்து நன்றாக கலந்து உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவேண்டும். உருண்டை சரியாக பிடிக்க வரவில்லையென்றால் இன்னும் கொஞ்சம் பொட்டுக்கடலையை பொடித்து சேர்த்துக்கொள்ளவேண்டும். உருண்டைகளை ஒரே அளவில் அழகாக பிடித்துக்கொள்ளவேண்டும்.

ஆழமான கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, உருண்டைகளை சேர்த்து பொரித்து எடுத்தால் சூப்பர் சுவையான சேனைகிழங்கு கோலா உருண்டைகள் தயார். 

இதை சாப்பாட்டுக்கு தொட்டுக்கொள்ளலாம் அல்லது ஸ்னாக்ஸாகவும் சாப்பிடலாம். குழந்தைகள் இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பிடித்த சுவையில் சேனைக்கிழங்கு கோலா உருண்டைகள் இருக்கும்.

இதுபோன்ற வித்யாசமான எண்ணற்ற ரெசிபிக்களை ஹெச்.டி. தமிழ் தொகுத்து வழங்கி வருகிறது. எனவே இவற்றை தெரிந்துகொள்ள நீங்கள் தொடர்ந்து இந்தப் பக்கத்தில் இணைந்து இருங்கள்.