Benefits of Fennel Seeds : செரிமானம்; சுவாச புத்துணர்ச்சி; எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும் சோம்பு! முழு விவரம் இதோ!
Benefits of Fennel Seeds : செரிமானம், சுவாச புத்துணர்ச்சி என எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும் சோம்பு இன்னும் எத்தனை நன்மைகளை வழங்குகிறது என்ற முழு விவரம் இதோ.

தினமும் ஒரு ஸ்பூன் சோம்பை வாயில் போட்டு மெல்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அதை தெரிந்துகொண்டால் நீங்கள் கட்டாயம் அதை பின்பற்றுவீர்கள். சோம்பில் உள்ள ஆரோக்கிய நன்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள். சோம்பு அல்லது பெருஞ்சீரகம் என்று அழைக்கப்படுகிறது சோம்பு. இந்தியாவில் உள்ள சமையலறைகளில் நீக்கமற இடம் பெற்றிருப்பது. அதன் நன்மைகளை தெரிந்துகொள்ளும் முன்னரே நீங்கள் அதை பயன்படுத்திதான் வந்துள்ளீர்கள். இன்னும் முழுமையாக தெரிந்துகொண்டால் விடவே மாட்டீர்கள். இது சாப்பிட்டவுடன் செரிமானத்துக்காகவும், வாயில் புத்துணர்ச்சியை ஏற்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ஓட்டல்களில் உணவு சாப்பிட்டு திரும்பும்போது கொடுப்பார்கள். இது உங்கள் உடலை சுத்தம் செய்வதுடன் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது. சோம்பு ஒரு ஸ்பூன் தினமும் சாப்பிடுவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
செரிமானத்துக்கு உதவுகிறது
சோம்பில் செரிமானத்துக்கு உதவக்கூடிய எண்ணற்ற நற்குணங்கள் உள்ளன. அவை உங்கள் உடலில் வாயுவை ஏற்படுத்தும் எண்சைம்கள் உருவாகத் தூண்டுகிறது. இது செரிமானத்தை இலகுவாக்குகிறது. மேலும் வயிறு உப்புசம், செரிமானக் கோளாறு மற்றும் மலச்சிக்கல் ஆகிய பிரச்னைகளையும் தீர்க்கிறது.
சுவாச புத்துணர்ச்சி
சோம்பு இயற்கையிலேயே இனிப்பு சுவை கொண்டது. இது உங்கள் சுவாசத்துக்கு புத்துணர்ச்சியளிக்கிறது. வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது. இதன் சுவையும், புத்துணர்வுத்திறனும் அதற்கு உதவுகிறது. இதில் உள்ள பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள், வாயில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி உங்கள் சுவாசத்துக்கு இயற்கை புத்துணர்ச்சியைத் தருகிறது.