Sciatica Problem : இடுப்பு முதல் கால் வரை உள்ள நரம்பு இழுக்கும் பிரச்னைக்கு தீர்வு! பாலில் இதை கலந்து இரவில் பருகுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Sciatica Problem : இடுப்பு முதல் கால் வரை உள்ள நரம்பு இழுக்கும் பிரச்னைக்கு தீர்வு! பாலில் இதை கலந்து இரவில் பருகுங்கள்!

Sciatica Problem : இடுப்பு முதல் கால் வரை உள்ள நரம்பு இழுக்கும் பிரச்னைக்கு தீர்வு! பாலில் இதை கலந்து இரவில் பருகுங்கள்!

Priyadarshini R HT Tamil
Published Apr 27, 2024 04:31 PM IST

Sciatic Nerve Problem : இடுப்பு முதல் கால் வரை உள்ள பெரிய நரம்பு இழுத்தல், நரம்பு பிடிப்பு, சியாடிக்கா, கை நரம்பு, கால் நரம்பு மரத்துப்போவதை சரிசெய்யக்கூடிய ஒரு பொடி. இந்தப் பொடியை ஒருமுறை செய்து, தினமும் கொஞ்சம் சாப்பிட்டுக்கொண்டு வர பலன் கிடைக்கும்.

Sciatica Problem : இடுப்பு முதல் கால் வரை உள்ள நரம்பு இழுக்கும் பிரச்னைக்கு தீர்வு! பாலில் இதை கலந்து இரவில் பருகுங்கள்!
Sciatica Problem : இடுப்பு முதல் கால் வரை உள்ள நரம்பு இழுக்கும் பிரச்னைக்கு தீர்வு! பாலில் இதை கலந்து இரவில் பருகுங்கள்!

(நாட்டு மருந்துகடைகள் மற்றும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும். ஆளிவிதையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பண்புகள் உள்ளது. பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளது. வைட்டமின் இ, கனிமச்சத்துக்களான மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்துகள் உள்ளன. இதில் உள்ள வைட்டமின் இ சரும ஆரோக்கியத்துக்கும், எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

இதில் உள்ள பொட்டாசியம் நரம்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தை வளமாக்கி, உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டத்தை உறுதிசெய்கிறது. நமது நரம்புகள் வலுவாகவும், ரத்த ஓட்டம் சீராகவும் இருந்தால் போதும் உடலில் நரம்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படாது. இதுபோன்ற எண்ணற்ற நன்மைகளை ஆளிவிதைகள் நமது உடலுக்கு வழங்குகிறது

இதை வறுத்தும் சாப்பிடலாம். வறுக்காமலும் சாப்பிடலாம். இதை கடாயை சூடாக்கி, வறுத்துக்கொள்ளவேண்டும். உடனடியாக அடுப்பை அணைத்துவிடலாம். வெடித்து வந்தால் போதும்)

பட்டை – 2 இன்ச்

(பட்டையில் உடலுக்கு தேவையான அளவு மாங்கனீஸ், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் முக்கிய தாதுஉப்புக்கள் உள்ளது. தினமும் சிறிதளவு பட்டை எடுத்துக்கொள்ளும்போது, அது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும். ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. ரத்தம் உறைதலை தடுக்கிறது. நரம்புக்கு வலு தரும். உடலில் உள்ள நச்சுக்களை கரைத்து வெளியேற்றும். ரத்த ஓட்டத்தை சீராக்குவதில் பட்டை முதன்மை வகிக்கிறது. எனவே மூட்டுவலி மற்றும் வாத நோய்கள் உள்ளவர்கள் அதிகளவில் பட்டையை எடுத்துக்கொள்வது நல்லது)

மஞ்சள் பொடி – கால் ஸ்பூன்

நச்சுக்களை வெளியேற்றும். வீக்கத்தை குறைக்கும். உடலில் தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கும்.

சுக்குப்பொடி – ஒரு ஸ்பூன்

உடல் வலி, செரிமான கோளாறை சரிசெய்யும். வாயுக்களை போக்கும். நரம்புகளுக்கு ஊட்டச்சத்துக்களை கொடுக்கும். ரத்த உறைதலை தடுக்கும். மலச்சிக்கலை போக்கும்.

பாதாம் – 10 (ஊறவைத்து தோல் நீக்கியது)

மனஅழுத்தத்தை சரிசெய்யும். எலும்பை வலுவாக்கும். மலச்சிக்கல், செரிமான கோளாறுகள் நீங்கும். பாதாம் பருப்பில் நார்ச்சத்துக்கள், புரதங்கள், வைட்டமின் இ, மெக்னீசியம், தாமிரம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் என எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. நீரிழிவு தொடர்பான பிரச்னைகளை குணப்படுத்தும். ஊறவைத்து தோல் நீக்கி அரைத்து சாப்பிடும்போது உடலுக்கு அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். இதில் உள்ள இரும்பு மற்றும் துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்துக்களை உடல் கிரகிக்க உதவும்.

தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் அல்லது கருப்பட்டி – தேவையான அளவு

செய்முறை

வறுத்த ப்ளாக்ஸ் விதைகளுடன், பட்டை, மஞ்சள் பொடி, சுக்குப்பொடி என அனைத்தையும் சேர்த்து காய்ந்த மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்தப்பொடியை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஊறவைத்த பாதாமை தோளை உரித்து அரைத்து பாலுடன் சேர்த்து காய்ச்சி அதில் இந்த பொடியில் ஒரு ஸ்பூன் சேர்த்து தினமும் இரவு உறங்கச் செல்லும்முன் பருகவேண்டும்.

காலையில் மலத்தை நன்றாக கழிக்கச்செய்யும். சருமத்தை பாதுகாக்கும். தலைமுடி தொடர்பான பிரச்னைகளை குணப்படுத்தும்.

கை-கால் வலி, நரம்பு வலி, மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைப்போக்கும். இந்தப்பொடி ஒரு மாதம் வரை கெட்டுப்போகாது. எனவே நரம்பு மற்றும் எலும்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும்போது, 15 நாட்கள் சாப்பிடவேண்டும். பின்னர் வாரத்தில் இருமுறை எடுத்தால் போதும். கட்டாயம் முயற்சி செய்து பலன் பெறுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.