தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Relationship Problems And Solutions : உறவில் விரிசலா? இணையருடன் சண்டையா? இன்பமாக வாழ இதையெல்லாம் முயற்சியுங்கள்!

Relationship Problems and Solutions : உறவில் விரிசலா? இணையருடன் சண்டையா? இன்பமாக வாழ இதையெல்லாம் முயற்சியுங்கள்!

Priyadarshini R HT Tamil
Apr 23, 2023 01:06 PM IST

Problems with Partner : உறவில் நாம் சில நேரங்களில் சில தவறுகளை தெரிந்தோ, தெரியாமலோ செய்துவிடுகிறோம். அது நமது உறவை பாதிக்கிறது. எனவே ஒரு சுமூகமான உறவுக்கு இதையெல்லாம் நீங்கள் தவிர்த்தால் அந்த சுமூகமான உறவை பேண முடியும்.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

இங்கு நீங்கள் தவிர்க்க வேண்டிய உறவு தவறுகள் கொடுக்கப்பட்டுள்ளன

சிலர் தங்களை அறியாமலேயே சில தவறுகளை செய்து தங்கள் உறவுக்குள் சிக்கலை ஏற்படுத்திக்கொள்வார்கள்.

உங்கள் இணையரின் தேவை மற்றும் உணர்வுகளை புறக்கணிப்பது அல்லது மறப்பது

உங்கள் இணையரின் தேவைகளையும், உணர்வுகளையும் புறக்கணிக்காமல் மாறாக அவர்களுடன் அதுகுறித்து பேசிப்பாருங்கள். அவர்கள் இடத்தில் உங்களை பொருத்தி அவர்களின் நிலையை உணர்ந்து அதன்படி செயல்படுங்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். சமரசத்துக்கு தயாராக இருங்கள்.

உங்கள் இணையர்தானே என்ற ஏளனம் வேண்டாம்.

நமது இணையர்தானே என்ற ஏளனம் வேண்டாம். மாறாக அவர்களை பாராட்டியும், அவர்களை வாழ்த்தியும், நன்றி தெரிவித்தும் பாருங்கள் உங்கள் உறவு எவ்வளவு பண்பட்தாகவும், மேம்பட்டதாகவும் இருக்கும். அவர்களின் முயற்சிகளை எப்போதும் பாராட்டிக்கொண்டே இருங்கள். அவர்கள் மீது நீங்கள் அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதை சிறிய விஷயங்களில் கூட காண்பித்துக்கொண்டே இருங்கள்.

உங்கள் இணையரை குறைகூறிக்கொண்டோ அல்லது விமர்சித்துக்கொண்டோ இருக்காதீர்கள்.

அவர்களை குறை கூறுவதை விட்டு, விட்டு அவர்களின் நேர்மறையான பக்கத்தில் கவனம் செலுத்துங்கள். அவர்களுக்கு தேவைப்படும்போது நல்ல ஃபீட்பேக் கருத்தை கூறுங்கள். மரியாதையுடன் நடத்துங்கள் கடுமையான வார்த்தைகளை தவிர்த்துவிடுங்கள். குத்திக்காட்டும் வகையில் பேசுவதையும் குறைத்துவிடுங்கள். அது உங்கள் இணையரின் உணர்வுகளை புண்படுத்தலாம்.

சண்டையை தவிருங்கள் அல்லது உங்கள் உணர்ச்சிவசத்தை குறையுங்கள்

மாறாக, பிரச்னைகளை அமைதியாகயும், மரியாதையுடனும் எடுத்துக்கூறுங்கள். உங்கள் தேவைகளையும், உணர்வுகளையும் எடுத்துக்கூறுவதற்கு நான் என்ற பதத்தை பயன்படுத்துங்கள். உங்கள் இருவருக்கும் சரியாக இருக்கும் தீர்வை கண்டுபிடியுங்க்ள்.

உங்களை கவனித்துக்கொள்வதை அல்லது தனிப்பட்ட விருப்பத்தை மறந்துவிடாதீர்கள்

உங்களுக்கென்று நேரம் ஒதுக்கிக்கொள்ளுங்கள். உங்கள் பொழுதுபோக்கு மற்றும் ஆசைகளுக்கு மரியாதை கொடுங்கள். அது உங்களை பலசாலியாக்கும். அது உங்கள் உறவை மேம்படுத்தும். உங்கள் தேவைகளை புறக்கணிப்பதை தவிர்க்கவும். ஏனென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாதவரை மற்றவர்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியாது.

உங்கள் இணையருடன் உறவை மேம்படுத்த சில மாற்றங்களை செய்யுங்கள்.

உங்கள் இணையரின் நற்குணங்களை பட்டியலிடுங்கள். நீங்கள் எதற்கு நன்றி கூற வேண்டுமோ அதை பட்டியலிட்டு, அதற்கு நன்றி கூறுங்கள். அது உங்கள் உறவின் பாசிடிவ் பக்கத்தில் கவனம் செலுத்த உதவும்.

நன்றி சொல்வதை வழக்கமாக கொள்ளுங்கள். சிறிய விஷங்களுக்கெல்லாம் நன்றி சொல்லுங்கள். அது சமையல், துணி துவைப்பது அல்லது சுத்தம் செய்வது குப்பையை கொட்டுவது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

தினமும் சிறிது நேரம் செலவு செய்து உங்கள் இணையர் குறித்த நல்ல விஷயங்களை எழுதுங்கள். அது உங்களுக்கு அவர்களின் நல்ல விஷயத்தில் கவனம் செலுத்த உதவும். அது உங்கள் உறவை மேம்படுத்தும்.

அவர்களை பாராட்டுங்கள், உங்கள் இணையருக்கு உங்கள் இணையரை பாராட்டுவதில் நேரம் செலவிடுங்கள். அது அவர்களை நீங்கள் பாராட்டுவதற்கு மெனக்கிடுகிறீர்கள் என்பதை காட்டும். அவர்களின் சாதனைகள், அவரின் உடைகள், செயல்கள் என அனைத்தையும் பாராட்டுங்கள்.

உங்கள் உறவில் உள்ள முக்கிய நாட்கள் குறிப்பாக ஆண்டு விழாக்கள், பிறந்த நாள்கள் என அனைத்தையும் கொண்டாடுங்கள். இந்த நினைவுகளை சிறப்பானதாகவும், நினைவில் வைத்துக்கொள்ளக்கூடியதாகவும் வைத்திருங்கள். அது இருவருக்கும் பிணைப்பை கொடுக்கும்.

சில நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய செயல்களை செய்யுங்கள். அவர்களுக்கு காதல் குறிப்புகள் எழுதுவது, அவர்களுக்கு பிடித்த உணவை சமைப்பது அல்லது அவர்களுக்கு திடீர் பரிசுகளை கொடுப்பது என அனைத்தும் செய்யுங்கள். அது உங்கள் இணையர் மீது நீங்கள் வைத்துள்ள அன்பை காட்டும்.

அவர்களின் குறைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். யாரும் நிறையானவர் கிடையாது. அவர்களின் பாசிடிவ் பக்கத்தை நீங்கள் பார்க்க வேண்டும். அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.

உங்கள் இணையரின் பார்வையில் இருந்து அனைத்தையும் பாருங்கள். அது நல்ல புரிதலுக்கும் உங்களுக்கிடையேயான ஒற்றுமைக்கும் வழிவகுக்கும்.

மேலும் உங்கள் உறவில் நன்றியை பழகுங்கள். அது உங்களுக்கிடையே உள்ள இணக்கத்தை பலப்படுத்தும். இருவருமே அன்பு பெறும், பாரட்டு பெறும் ஒரு நேர்மறையான சூழலை உருவாக்குங்கள். உறவில் மகிழ்ந்திருங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்