தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Prawn Biriyani : தேங்காய் பால் சேர்த்து வித்யாசமான இறால் பிரியாணி! வீடே மணக்கும்! சுவை அள்ளும்!

Prawn Biriyani : தேங்காய் பால் சேர்த்து வித்யாசமான இறால் பிரியாணி! வீடே மணக்கும்! சுவை அள்ளும்!

Priyadarshini R HT Tamil
Sep 09, 2023 11:02 AM IST

Prawn Biriyani : தேங்காய் பால் சேர்த்து வித்யாசமான சுவையில் வீடே மணக்கும் இறால் பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேங்காய் பால் கலந்து இறால் பிரியாணி செய்வது எப்படி?
தேங்காய் பால் கலந்து இறால் பிரியாணி செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

பாஸ்மதி அரிசி - 2 கப்

நெய் - 3 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

பட்டை

கிராம்பு

ஏலக்காய்

பிரியாணி இலை

அன்னாசி பூ

வெங்காயம் - 4 (நீளமாக நறுக்கியது)

தக்காளி - 3 (நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

மிளகாய் தூள் - 3 ஸ்பூன்

தனியா தூள் - 2 ஸ்பூன்

கொத்தமல்லி இலை - சிறிதளவு

புதினா இலை – சிறிதளவு

தேங்காய் பால் - 2 கப் நீர் சேர்த்தது

தண்ணீர் – தேவையான அளவு

மசாலா விழுது அரைக்க தேவையான பொருட்கள்

பூண்டு - 12 பற்கள்

இஞ்சி - 2 இன்ச் துண்டு நறுக்கியது

சின்ன வெங்காயம் - 10

துருவிய தேங்காய் - 1 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - 4

காய்ந்த மிளகாய் - 5

புதினா இலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை -

பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.

இறாலை சுத்தம் செய்து, உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு கழுவவேண்டும்.

சுத்தம் செய்த இறாலை உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து ஊறவைக்க வேண்டும்.

மிக்ஸியில் இஞ்சி-பூண்டு, சின்ன வெங்காயம், துருவிய தேங்காய், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து, நன்கு விழுதாக அரைக்க வேண்டும்.

தேங்காயை அரைத்து, பிரியாணிக்கு தேவையான தேங்காய் பால் தயார் செய்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பிரஷர் குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன் நிறமானதும், அரைத்த மசாலா விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

அடுத்து இதில் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி நன்கு மசிந்த பின், இதில் உப்பு, மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்து இதில் ஊறவைத்த இறாலை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

குறைந்த தீயில், தேங்காய் பால் ஊற்றி கிளற வேண்டும்.

பின்னர் இதில் ஊறவைத்த அரிசி சேர்த்து கிண்டவேண்டும்.

குக்கரை நன்றாக ஆவி வந்ததும், வெயிட் போட்டு 8 நிமிடம் வேகவைக்கவேண்டும் அல்லது நீங்கள் வழக்கமாக பிரியாணி வேகவைத்து, விசில் விட்டு இறக்குவதுபோல் செய்துகொள்ள வேண்டும்.  

குக்கரின் பிரஷர் இறங்கியதும், திறக்க வேண்டும். மல்லித்தழை, வறுத்த முந்திரி நெய் சேர்த்து கிளறிவிடலாம். இது முற்றிலும் உங்கள் விருப்பத்தை பொறுத்தது.

சுவையான இறால் பிரியாணி சாப்பிட தயாராக உள்ளது. அசைவ பிரியர்கள் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

இதற்கு தொட்டுக்கொள்ள வழக்கமான ரைத்தா, தால்சா ஆகியவையோ அல்லது ஏதாவது கிரேவி வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.

ஒருமுறை இறால் பிரியாணியை இப்படி செய்துவிட்டால் மீண்டும், மீண்டும் சாப்பிடத்தோன்றும். செய்து, சாப்பிட்டு மகிழுங்கள்.

நன்றி - ஹேமா சுப்ரமணியன் 

WhatsApp channel

டாபிக்ஸ்