Pottukadalai Urundai : உங்கள் குழந்தை ஒல்லியாக இருக்கிறார்கள் என்ற கவலையா? இதோ இந்த ஸ்னாக்ஸ் போதும்!
Pottukadalai Urundai : உங்கள் குழந்தை ஒல்லியாக இருக்கிறார்கள் என்ற கவலையா? இதோ இந்த ஸ்னாக்ஸ் போதும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்கள் குழந்தைகள் ஒல்லியாகவே இருக்கிறார்கள் என்ற கவலை உங்களுக்கு ஏற்பட்டால், நீங்கள் அவர்களுக்கு இந்த ஒரு ஸ்னாக்ஸ் கொடுத்தாலே போதும். ஒல்லியான தேகமோ அல்லது குண்டான தேகமோ கொண்டிருந்தால், பிரச்னையில்லை. ஆனால் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். அவர்கள் சரியான வயதில் சரியான எடையை கொண்டிருக்கிறார்களா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள் வழக்கமான துறுதுறுப்புடன் அவர்கள் இருந்தால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் உங்கள் குழந்தைகள் ஒல்லியாக வயதுக்கு ஏற்ப எடை மற்றும் உயரம் என்ற வளர்ச்சிக் கோளாறுகள் இருந்தால்தான் நீங்கள் வருந்தவேண்டும். எனவே அதுபோன்ற குழந்தைகள் இருந்தால், நீங்கள் அவர்களுக்கு சிறப்பு உணவுகளை கொடுக்கவேண்டும். அதுவும் ஆரோக்கியமானதான இருக்க வேண்டும் என்பதை உறுதியாக்குங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்ததாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் அதை சாப்பிடுவார்கள். அதுபோன்ற ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை தெரிந்துகொள்ளுங்கள். இதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதும். மேலும் இதை செய்வது எளிது என்றால், நீங்கள் தினமுமே செய்து கொடுத்துவிடுவீர்கள். அது என்ன என்று பார்க்கலாமா?
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை – ஒரு கப்
வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன் (பொடித்தது)
